உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வந்தே பாரத் ரயில்களுக்காக மற்ற ரயில்கள் 20 நிமிடம் தாமதம்

வந்தே பாரத் ரயில்களுக்காக மற்ற ரயில்கள் 20 நிமிடம் தாமதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: மதுரை - பெங்களூரு இடையே புதிதாக வந்தே பாரத் ரயில் விரைவில் துவக்கப்பட உள்ளது. இதற்கான கால அட்டவணை தயாராகி வருகிறது. ஏற்கனவே இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்களால், அதே வழித்தடங்களில் செல்லும் மற்ற விரைவு ரயில்கள், 20 நிமிடங்கள் வரை தாமதமாக இயக்கப்படுவதாக பயணியர் புகார் தெரிவித்துள்ளனர். அதேபோல, மதுரை - பெங்களூரு வந்தே பாரத் ரயிலால், அதே தடத்தில் செல்லும் மற்ற விரைவு ரயில்களின் இயக்கத்தில் தாமதம் கூடாது என, பயணியர் வலியுறுத்துகின்றனர்.இது குறித்து, பயணியர் சிலர் கூறியதாவது: சென்னை - கோவை உட்பட பல்வேறு வழித்தடங்களில், வந்தே பாரத் ரயில்கள் இயக்குவது வரவேற்கத்தக்கது. இதற்காக, அதே வழித்தடத்தில் இயக்கப்படும் மற்ற ரயில்களின் வேகம் அல்லது இயக்கத்தில் தாமதம் கூடாது. வந்தே பாரத் ரயில்கள் புறப்படுவதற்கு, ஒரு மணி நேரம் முன்னதாக கிளம்ப வேண்டிய மற்ற ரயில்கள், 20 நிமிடங்கள் வரை தாமதமாக இயக்கப்படுவதை பார்க்க முடிகிறது. எனவே, புதியதாக துவங்க உள்ள மதுரை - பெங்களூரு வந்தே பாரத் ரயிலுக்காக, அதே தடத்தில் இயக்கப்படும் ரயில்களின் வேகத்தை குறைக்கக் கூடாது. இவ்வாறு கூறினர்.ரயில் ஓட்டுனர்கள் சிலர் கூறுகையில், 'வந்தே பாரத் இயக்கப்படும் வழித்தடங்களில், அதற்கு முன்னதாக செல்லும் மற்ற விரைவு ரயில்கள், சில முக்கிய ரயில் நிலையங்களில் கூடுதல் நேரம் நிறுத்தப்படுகிறது. இதனால், காலதாமதம் ஏற்படுகிறது' என்றனர்.ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, 'புதிய ரயில் சேவை துவங்கும் போது, அந்த வழித்தடத்தில் மற்ற ரயில்களின் இயக்கத்தில் சில மாற்றங்கள் தவிர்க்க முடியாதவை. பயணியருக்கான கூடுதல் வசதியை தான் பார்க்க வேண்டும். மதுரை - பெங்களூரு வந்தே பாரத் ரயிலுக்காக, மற்ற ரயில்களின் வேகம் குறைக்கப்படாது' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

GNANASEKARAN GNANAM
ஜூன் 25, 2024 22:06

இந்தியா வளர்ச்சி பெற சில கை கூலிகளை கண்டுபிடித்து களை எடுக்க பட வேண்டும் முதலில் திமுக என்ற கொடிய கருவேலி வெட்டி எறியபட வேண்டும் தானாகவே உலகின் முதல் நாடாக இந்தியா வல்லரசு ஆகிவிடும் தமிழகத்தில் அமைதி நிலவும்


N Maheswaran
ஜூன் 25, 2024 19:22

எந்தவொரு முன்னேற்றம் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது திராவிட மாடல்


venugopal s
ஜூன் 25, 2024 07:28

இதுதான் பாஜக மாடல். பயண நேரத்தை குறைக்க வந்தே பாரத் ரயில்களின் வேகத்தைக் கூட்டச் சொன்னால் மற்ற ரயில்களின் வேகத்தைக் குறைத்து விட்டு வித்தை காண்பிப்பது !


Svs Yaadum oore
ஜூன் 25, 2024 06:13

வந்தே பாரத் ரயில் தேவை ..மற்ற ரயில்களும் தேவை ....வந்தே பாரத் ரயில்களுக்காக மற்ற ரயில்கள் நேரம் அதிகரிக்கக்கூடாது .. இதனால் மற்ற ரயில் பயணிகளுக்கு தொல்லை ...புதிய ரயில் வந்தே பாரத் நேரத்தை அதிகரிக்கட்டுமே .....


மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி