உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஸ்டாலினுக்கு பொய்க்கு நோபல் பரிசு தரலாம்: பழனிசாமி

ஸ்டாலினுக்கு பொய்க்கு நோபல் பரிசு தரலாம்: பழனிசாமி

சென்னை : ''பொய் பேசுவதற்கு நோபல் பரிசு தருவதாக இருந்தால், ஸ்டாலினுக்கு தாராளமாக தரலாம்,'' என, தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில், அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி பேசினார்.காஞ்சிபுரம் அ.தி.மு.க., வேட்பாளர் ராஜசேகர், மத்திய சென்னை வேட்பாளர் தே.மு.தி.க.,வின் பார்த்தசாரதி, தென்சென்னை வேட்பாளர் ஜெயவர்தனை ஆதரித்து, அ.தி.மு.க., பொதுசெயலர் பழனிசாமி, காஞ்சிபுரம் மற்றும் சென்னையில் பிரசாரம் செய்தார். அவர் பேசியதாவது:தி.மு.க.,வின் மூன்றாண்டு ஆட்சியில் என்ன செய்துள்ளனர்? எங்களை பற்றி விமர்சிப்பதையே முதல்வர் வழக்கமாக கொண்டுள்ளார். விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. அரிசி விலை கிலோ, 18 ரூபாய் உயர்ந்துள்ளது. மளிகை பொருட்கள் விலை, 40 சதவீதம் உயர்ந்து விட்டது. தி.மு.க., அரசில் கட்டுமான பொருட்களின் விலையும் பன்மடங்கு உயர்ந்துள்ளது. 190 ரூபாய்க்கு விற்ற சிமென்ட், 390க்கு விற்கப்படுகிறது. நகரத்தில் உள்ளவர்கள் இனி மேல் வீடு கட்டுவது சிரமம்; கனவில் தான் கட்ட முடியும். இதை கட்டுப்படுத்த முதல்வருக்கு திராணி இல்லை.அவர் தலைமையில் ஊழல் நடக்காத துறையே இல்லை. லஞ்சம் கொடுத்தால் தான் வேலை நடக்கிறது. 30 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்தது தான் தி.மு.க.,வின் இரண்டாண்டு சாதனை. தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், மின் கட்டணம் உயர்ந்து விடுகிறது. மின் வெட்டு தொடர்ந்து கொண்டிருக்கிறது. அ.தி.மு.க., ஆட்சி எப்போதேல்லாம் வருகிறதோ, அப்போதெல்லாம் தடையில்லா மின்சாரம் வழங்கப்படுகிறது.வழிப்பறி, கொள்ளை, பாலியல் வன்கொடுமை ஆகியவை, தமிழகத்தில் அதிகரித்துள்ளன. போதைப்பொருட்களின் விற்பனையும் அதிகரித்துள்ளது. குறிப்பாக, கஞ்சா விற்பனை. போதைப்பொருள் வழக்கில் தி.மு.க.,வின் அயலக அணியை சேர்ந்த ஒருவர், டில்லியில் கைது செய்யப்பட்டுள்ளார். போதைப்பொருள் கடத்தியவர்களுடன், தி.மு.க,வுக்கு தொடர்பு உள்ளது.தி.மு.க, ஊழலின் ஊற்றுக்கண்; தமிழகத்தில் போலீசுக்கே பாதுகாப்பில்லை. போலீஸ்காரர்கள் பைக்கையே, திருடர்கள் பிடுங்கிச் சென்றுள்ளனர். கனிமொழி பாதுகாப்புக்கு சென்ற பெண் போலீசின் புகாரை கண்டுகொள்ளவே இல்லை. கடந்த சட்டசபை தேர்தலுக்கு முன், 520 அறிவிப்புகளை முதல்வர் வெளியிட்டார். 10 சதவீதம் மட்டுமே நிறைவேற்றியுள்ளார். நிறைவேற்றியதாக அவர் கூறுவது எல்லாமே பொய்; வாய் திறந்தால் பொய் தான். பொய் பேசுதவற்கு, 'நோபல்' பரிசு தருவதாக இருந்தால், ஸ்டாலினுக்கு தருவது பொருத்தமாக இருக்கும்.நம்மை கள்ள கூட்டணி என்று சொல்லும் தி.மு.க., பெட்ரோல், டீசல் விலையை பற்றி, மத்திய அரசிடம் கேள்வி கேட்பதில்லை. உண்மையிலேயே அவர்கள் தான் கள்ள கூட்டணி. அ.தி.மு.க., கொண்டு வந்த மடிக்கணினி வழங்கும் திட்டம், தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் நிறுத்தப்பட்டு உள்ளன. ஏன் இந்த அரசியல் காழ்ப்புணர்ச்சி. பணநாயகத்திற்கும், ஜனநாயகத்திற்கும் நடக்கிற தேர்தல் இது. நமக்கும் தி.மு.க.,வுக்கு 3 சதவீத ஓட்டுகள் தான் வித்தியாசம். இந்த தேர்தலில் ஓங்கியடித்து வெற்றி அடைய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

சாடிய பழனிசாமி

ஒரு போலீஸ் அதிகாரி, கட்சிக்கு வந்து ஐந்தாண்டு கூட ஆகவில்லை. குழந்தை மாதிரி உள்ள அவர், அ.தி.மு.க., காணாமல் போய்விடும் என்கிறார். வரலாறு தெரியாமல் அவர் பேசுகிறார். அவர் கண்ட கனவு வேறு, நடந்தது வேறு. அதனால் அவர், விரக்தியின் விளிம்புக்கு சென்று விட்டார். ஆகவே, தம்பி பொறுமையாக பேச வேண்டும்.அ.தி.மு.க., ஒரு மாதிரியான கட்சி. ஏற்கனவே சொல்லிவிட்டேன். 2 கோடிக்கு மேல் தொண்டர்கள் உள்ளனர். எதை பேச வேண்டுமோ அதை பேச வேண்டும். அ.தி.மு.க.,வுக்கு தனி பலம் உண்டு. அ.தி.மு.க.,வை வீழ்த்த நினைப்பவர்கள் தான் வீழ்ந்து போவர். இதை கண் கூடாக பார்த்து கொண்டு தானே இருக்கிறோம். எதையெல்லாமோ துாக்கிக் கொண்டு திரிகின்றனர். அ.தி.மு.க,வில் யார் வேண்டுமானாலும் உயர்ந்த பதவிக்கு வரமுடியும். உங்கள் கட்சி மாதிரி, டில்லியில் அப்பாயின்மென்ட் வாங்குற கட்சி இல்லை. ஜூன் 4க்கு பின், அந்த தம்பி இருப்பாரா என்றே தெரியவில்லை.இவ்வாறு புரசைவாக்கத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பழனிசாமி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Jayaraman Pichumani
ஏப் 16, 2024 19:31

தமிழ்நாட்டு கோயபல்ஸ் ஸ்டாலின் ஜூன் -ஆம் தேதிக்குப் பின் அதிமுக இருக்காது என்று அண்ணாமலை சொன்னது நிச்சயம் உண்மையாகும் எடப்பாடி அவர்களே


Nallavan
ஏப் 16, 2024 13:57

தவழ்ந்து செல்வதற்கு நோபல் பரிசு கொடுத்தால் கண்டிப்பாக நம்ம ஈ பி எஸ் க்குத்தான்


Narayanan
ஏப் 16, 2024 13:30

எடப்பாடி சொல்வது ஸ்டாலினுக்கு சளைத்தவர் அல்ல எடப்பாடி இருவரும் கூட்டு கொள்ளை கூட்டணிகள் அன்றே காமராஜர் சொன்ன மாதிரி இரண்டும் ஒரு குட்டையில் ஊறிய மட்டை


Sivarajakumar T
ஏப் 16, 2024 11:23

திராவிடம் என்றாலே பொய்யும் பித்தலாட்டமும்தான்


அப்புசாமி
ஏப் 16, 2024 10:25

இவிங்களுக்குதான் இதுமாதிரி ஐட்டங்களுக்கு நோபல்பரிசு தரலாம்னு யோசிக்கத் தோணும். அரசியல்வாதியும், பொய், புனைசுருட்டுகளும் சேர்ந்தே இருக்கும்னு மக்களுக்கு தெரியும்.


ராமகிருஷ்ணன்
ஏப் 16, 2024 10:00

பொய், பித்தலாட்டம், களவாணிதனம், மொள்ளமாறிதனம், புளுகினிதனம், ரவுடித்தனம்.... போன்றவைகளின் முழு மொத்த வடிவம் திமுக, மூல ஊற்று திமுக. மற்ற திராவிட கட்சிகளுக்கும் உண்டு.


mindum vasantham
ஏப் 16, 2024 09:46

நடுவில் ஸ்டாலின் எப்பிடி வைகோ கால் வாரி தலைமைக்கு வந்தார் என்று அனைவருக்கும் தெரியும், அதே போல் அவர் தந்தையார் நெடுஞ்செழியனை எப்பிடி காலை வாரினார் என்று அனைவருக்கும் தெரியும், இப்போ துரை வைகோ கே ன் நேருவிடம் கையேந்தி நின்னு அசிங்க படுகிறார்


Kasimani Baskaran
ஏப் 16, 2024 09:37

திராவிடமே ஒரு பொய்யான கோட்பாடு இதில் ஒருவரை மட்டும் அவமதிக்க வேண்டும் என்பது வெறும் வன்மமே மூலப்பரிசு பிரித்தாண்ட வெள்ளைக்காரர்களுக்கு கொடுத்து இவர்களுக்கு ஏதாவது பார்த்து போட்டுக்கொடுக்கலாம்


thangavel
ஏப் 16, 2024 09:10

190 r kku. eppa sales pannuneenga sir


Sampath Kumar
ஏப் 16, 2024 09:01

அப்படியே உங்களுக்கும் ஒரு துணை ஆஸ்கார் கொடுக்கலாமுங்க பொய் என்பதை எப்படி சொல்ல வேண்டும் என்பதை தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் நீக்க சொன்ன உன்னத கருது மூலம் போவியா வந்துட்டாரு


மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ