உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கிரானைட் குவாரி விதிமீறல் அரசிடம் நீதிபதி குழு அறிக்கை

கிரானைட் குவாரி விதிமீறல் அரசிடம் நீதிபதி குழு அறிக்கை

சென்னை:மதுரை மாவட்டத்தில் கிரானைட் குவாரிகளில் பல்வேறு விதிமீறல்கள் நடந்தன. இவை குறித்து ஆராய்ந்த குழுக்கள், அரசுக்கு அறிக்கை அளித்திருந்தன. அவற்றை ஆராய்ந்து, அரசுக்கு தக்க பரிந்துரை அளிப்பதற்காக, ஓய்வுபெற்ற நீதிபதி ஜோதிமணி தலைமையில், ஓய்வுபெற்ற இந்திய புவியியல் ஆய்வு கழக கூடுதல் பொது இயக்குனர் பாஸ்கரன், ஓய்வுபெற்ற புவியியல் மற்றும் சுரங்கத் துறை கூடுதல் இயக்குனர் சுதர்சனம் ஆகியோரை உறுப்பினர்களாக கொண்ட உயர்மட்ட சிறப்புக் குழு, கடந்த ஆண்டு பிப்., 20ல் அமைக்கப்பட்டது.இக்குழு, மதுரை மாவட்டத்தில், 83 கிரானைட் குவாரிகளில் நடந்த விதிமீறல்கள் தொடர்பான தன் அறிக்கையை, அமைச்சர் துரைமுருகனிடம் நேற்று தலைமை செயலகத்தில் வழங்கியது. இயற்கை வளங்கள் துறை பொறுப்பு செயலர் பணீந்திர ரெட்டி, புவியியல் மற்றும் சுரங்கத் துறை கமிஷனர் சரவணவேல்ராஜ் உடனிருந்தனர். அறிக்கையில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் குறித்து, அரசு தரப்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி