உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பரந்துார் விமான நிலையம்: மத்திய அரசு அனுமதி

பரந்துார் விமான நிலையம்: மத்திய அரசு அனுமதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பரந்துார் விமான நிலையத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.காஞ்சிபுரம் மாவட்டம் பரந்துாரில், புதிய பசுமைவெளி விமான நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சென்னை அருகே அமைய உள்ள இந்த விமான நிலையத்துக்காக, பரந்துார் மற்றும் சுற்று வட்டார கிராமங்களை உள்ளடக்கி, 5,000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படுகிறது.பரந்துார் விமான நிலையம் அமைக்கும் பணிகளை, தமிழக அரசுக்கு சொந்தமான, 'டிட்கோ' எனப்படும், தமிழ்நாடு தொழில் துறை மேம்பாட்டு கழகம் மேற்கொண்டு வருகிறது. இந்த விமான நிலையத்துக்கு அனுமதி கேட்டு, சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்துக்கு, டிட்கோ கடிதம் எழுதி இருந்தது.இந்நிலையில், தமிழக அரசின் இந்த பரிந்துரையை ஏற்று, பரந்துார் விமான நிலையத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த தகவலை, தெலுங்கு தேசத்தைச் சேர்ந்த, சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு, சமீபத்தில் ராஜ்யசபாவில் தெரிவித்தார்.இது தொடர்பாக, எழுத்து வாயிலாக அவர் அளித்த பதிலில், 'பசுமைவெளி விமான நிலைய கொள்கை - 2008ன்- படி, பரந்துார் விமான நிலையத்துக்கு அனுமதி கேட்டு, தமிழக அரசின் டிட்கோ சார்பில் மனு அளிக்கப்பட்டது.'விரிவான ஆலோசனைகளுக்கு பின், பசுமைவெளி விமான நிலையங்களுக்கான வழிகாட்டுதல் குழு, கடந்த ஜூலை ௯ல், பரந்துார் விமான நிலையத்துக்கு அனுமதி அளித்தது' என, குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

கனோஜ் ஆங்ரே
ஜூலை 24, 2024 20:07

வடிவேல் பட காமெடி வசனம்... புரிஞ்சவன் புத்திசாலி...?


venugopal s
ஜூலை 24, 2024 16:05

மத்திய பாஜக அரசு அனுமதி மட்டுமே கொடுப்பார்கள், நிதியுதவி எல்லாம் எதிர்பார்த்து ஏமாற வேண்டாம்!


Barakat Ali
ஜூலை 24, 2024 13:34

கன்ஸ்ட்ரக்ஷன் சாமான்கள் காண்டிராக்டு தலைமை குடும்ப கம்பெனிக்கு ......


Vijay D Ratnam
ஜூலை 24, 2024 13:02

சென்னை மாநகரில் இருந்து 80 கிமீ தொலைவில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் சென்னை சர்வதேச விமான நிலையம். ஒலகத்துலேயே ஒரு சிட்டிக்கு 80 கிமீ தூரத்தில் விமான நிலையம் அமைக்குறாய்ங்கன்னா அது சென்னைலதான். அதற்கு காஞ்சிபுரம் புறநகர் பகுதியில் அமையவிருக்கும் ஏர்போர்ட்டுக்கு காஞ்சிபுரம் சர்வதேச விமான நிலையம் என்று பெயர் சூட்டினால் பொருத்தமாக இருக்கும்.


sankaranarayanan
ஜூலை 24, 2024 09:52

அப்பாடா எப்படியாவது இதற்கு அனுமதி கிடைத்தால் போதும் அது தெலுங்கு தேசத்தைச் சேர்ந்த, சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் தெலுங்கு பூர்விக அமைச்சர் ஆளும்போது அனுமதி அளித்தது போற்றவேண்டிய விஷயந்தான்


Swaminathan L
ஜூலை 24, 2024 09:22

பரந்தூர் மற்றும் அண்மை கிராம மக்களிடம் மத்திய அரசின் வற்புறுத்தலால், கட்டாய உத்தரவால் இங்கே புதிய விமான நிலையம் அமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்லி விடலாம்.


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி