உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ‛பங்காளியும் ரிப்பீட்டு....: அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையிலும் அரைத்த மாவு

‛பங்காளியும் ரிப்பீட்டு....: அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையிலும் அரைத்த மாவு

சென்னை: கடந்த தேர்தலின் போது, சென்னையில் உச்சநீதிமன்ற கிளை, மகளிர் உரிமைத்தொகை, நதிகள் இணைப்பு, இலங்கைத் தமிழர் பிரச்னை, வழக்காடு மொழி என அளித்த பல வாக்குறுதிகளை மீண்டும் இந்த முறையும் அ.தி.மு.க., அறிவித்து உள்ளது.தேர்தல் அறிக்கையில் கடந்த தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை தி.மு.க., அளித்து இருந்தது. அதேபோல் கடந்த லோக்சபா, சட்டசபை தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளையும் இந்த முறையும் அ.தி.மு.க., அறிவித்து அரைத்த மாவையே மீண்டும் அரைத்து உள்ளது. இதன் விவரம்

உச்சநீதிமன்ற கிளை

2019 லோக்சபா தேர்தல்

தமிழகத்தில் உச்சநீதிமன்ற கிளை ஏற்படுத்த நடவடிக்கை

2021 சட்டசபை தேர்தல்

சென்னையில் உச்சநீதிமன்ற கிளை அமைக்க நடவடிக்கை

2024 லோக்சபா தேர்தல்

சென்னையில் உச்சநீதிமன்ற கிளை அமைக்க நடவடிக்கை

நதிகள் இணைப்பு

2019 லோக்சபா தேர்தல்

தெற்கு வெள்ளாறு, மணிமுத்தாறு, வைகை, குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டம் கொண்டு வரப்படும்.

2021 சட்டசபை தேர்தல்

கோதாவரி-காவிரி இணைப்பு துரித நடவடிக்கைகள் கோதாவரி-காவிரி நதிநீர் இணைப்புத் திட்டத்தை துரிதமாக செயல்படுத்திட விரைவு நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் காவிரி வற்றாத ஜீவநதியாக மாறும்.பரம்பிக்குளம்-ஆழியார் அணைக்கட்டுத் திட்டத்தில் ஆணைமலையாறு-நல்லாறு திட்டத்தையும் மற்றும் பாண்டியாறு-புன்னம்புழா திட்டத்தையும் கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் நிறைவேற்றிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

2024 லோக்சபா தேர்தல்

கோதாவரி - காவிரி இணைப்பு திட்டத்தை வலியுறுத்துவோம்காவிரி- குண்டாறு- வைகை இணைப்பு திட்டத்தை தொடர்ந்து நிறைவேற்றிட வலியுறுத்துவோம்

2024 லோக்சபா தேர்தல்

பரம்பிக்குளம்- ஆழியாறு மற்றும் பாண்டியாறு - புன்னம்புழா இரண்டு திட்டங்களை விரைந்து செயல்படுத்த மத்திய அரசு, கேரள அரசு மூலம் நடவடிக்கை

மகளிர் உதவித்தொகை

2019 லோக்சபா தேர்தல்

அம்மா தேசிய வறுமை ஒழிப்பு திட்டம் மாதம் நேரடி உதவித்தொகை ரூ.1,500

2021 சட்டசபை தேர்தல்

மகளிர் நலன்( குல விளக்கு திட்டம்) சமூகத்தில திட்டத்தின் மூலம் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஒவ்வொரு மாதமும் உதவித்தொகையாக ரூ.1,500 வழங்கப்படும். குடும்ப தலைவியின் வங்கி கணக்கிலும் ஆண்கள் மட்டுமே உள்ள குடும்பத்தில் உள்ள ஆண்களின் வங்கி கணக்கிலும் செலுத்தப்படும்.

2024 லோக்சபா தேர்தல்

ஏழை குடும்பத் தலைவிக்கு மாதந்தோறும் ரூ.3, ஆயிரம் ஊக்கத்தொகை வழங்க வலியுறுத்துவோம்

வழக்காடு மொழி

2021 சட்டசபை தேர்தல்

உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழை கொண்டு வருவதற்கு நடவடிக்கை

2024 லோக்சபா தேர்தல்

உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ் மொழி இடம்பெற நடவடிக்கை

இலங்கைத் தமிழர்

2021 சட்டசபை தேர்தல்

இந்திய வாழ் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு 'இரட்டைக் குடியுரிமை' மற்றும் 'குடியிருப்பு அனுமதி' வழங்கிட மத்திய அரசை வலியுறுத்துவோம்.

2024லோக்சபா தேர்தல்

இந்தியாவில் அகதிகளாக வாழ்ந்து வரும் இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமையை விரைந்து வழங்க மத்திய அரசை வலியுறுத்துவோம்.

100 நாள் வேலைவாய்ப்புத் திட்டம்

2021 சட்டசபை தேர்தல்

100 நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தை 150 நாட்கள் வேலைவாய்ப்புத் திட்டமாக விரிவுபடுத்தப்படும்

2024 லோக்சபா தேர்தல்

மஹாத்மா காந்தி வேலைவாய்ப்பு திட்ட உறுதி திட்டத்தை நாட்களை 150 நாட்களாக உயர்த்த வேண்டும். சம்பளத்தை ரூ.450 ஆக உயர்த்த வேண்டும்.

நடந்தாய் வாழி காவேரி திட்டம்

2021 சட்டசபை தேர்தல்

காவிரி நதி மற்றும் அதன் உப நதிகளில் ஏற்படும் மாசுகளை களைய 'நடந்தாய் வாழி காவேரி' திட்டம் செயல்படுத்தப்படும்.

2024 லோக்சபா தேர்தல்

மத்திய அரசு உதவியுடன் நடந்தாய் வாழி காவேரி திட்டத்திற்கு புத்துயிர் கொடுக்க வலியுறுத்துவோம்

பெட்ரோல் டீசல் விலை

2019 லோக்சபா தேர்தல்

பெட்ரோலிய பொருட்களின் விலையை மத்திய அரசே நிர்ணயம் செய்ய வலியுறுத்தல்

2021 சட்டசபை தேர்தல்

பெட்ரோல் டீசல் விலை உயர்வை கணிசமாக குறைத்திட மத்திய அரசை வலியுறுத்துவோம்

2024 லோக்சபா தேர்தல்

பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதுடன், மத்திய அரசே நிர்ணயம் செய்ய வலியுறுத்துவோம்

காஸ் சிலிண்டர்

2021 சட்டசபை தேர்தல்

அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆண்டிற்கு ஆறு (6) விலையில்லா சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும்.

2024 லோக்சபா தேர்தல்

குடும்ப அட்டை உள்ள அனைவருக்கும் ஆறு இலவச காஸ் சிலிண்டர் வழங்க வேண்டும்.

ஹஜ், ஜெருசலேம் புனித பயணம்

2021 சட்டசபை தேர்தல்

முஸ்லிம்கள் ஹஜ் பயணம் செல்ல மானியம் உயர்த்தப்படும். கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் புனித பயணத்திற்கு யாத்திரிகர்களுக்கு முழு கட்டணத்தையும் அரசே செலுத்தும்

2024 லோக்சபா தேர்தல்

முஸ்லிம்கள் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ளவும், கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் புனிதப்பயணம் மேற்கொள்ளவும் யாத்ரீகர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதோடு மானியத்தை உயர்த்தி வழங்க நடவடிக்கை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

DVRR
மார் 22, 2024 17:26

திமுக???


C KALIDAS
மார் 22, 2024 17:15

ஆமாங்க புரட்சித் தமிழரே, உச்சநீதிமன்ற கிளையை நாட்டின் பல பிராந்தியங்களில் அமைத்தால் தான் ஏற்கனவே ஆட்சி பொறுப்பில் இருந்த இயக்கங்களின் நிர்வாகிகள் புது தில்லிக்கு வழக்குகளை சந்திக்க, வாய்தாவுக்கு செல்ல செலவில்லாமல் சிரமம் இல்லாமல் இருக்கும்!


Rajathi Rajan
மார் 22, 2024 16:45

ama unga katchi enna arikkai koduka pokuthu,,,,, athu mattum araikkatha maitha mavuaaa


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை