உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வீடியோ பதிவு ஆதாரமில்லாத செய்தி: பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா கூறுகிறார்

வீடியோ பதிவு ஆதாரமில்லாத செய்தி: பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா கூறுகிறார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'அப்பாவு மணி அடிச்சிக்கிட்டு இருந்திருப்பார்' என்ற தலைப்பில், தான் பேசியதாக வெளியிடப்பட்ட செய்தி, சமூக அமைதியை கெடுப்பதாகவும், தனக்கு மன உளைச்சலை ஏற்படுத்துவதாகவும் உள்ளது' என, பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா தெரிவித்துள்ளார்.பிரதமர் மோடி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் கைதாகி, ஜாமினில் வெளியே வந்தவர் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா. இவர் பேசியதாக வீடியோ ஒன்று, சமூக வலைதளங்களில் பரவியது.பதிவில், 'நாங்கள் மதம் மாற்றுவதாக, ஆர்.எஸ்.எஸ்.,காரன் சொல்றான். நாங்கள் மதம் மாற்றிக்கொண்டு தான் இருக்கிறோம். எங்கள் கோவில் ரெக்கார்டுகளை எடுத்துப் பாருங்கள். 'எங்க மதத்துக்கு வாங்க; நல்லா படிக்கலாம்; பட்டதாரி ஆகலாம்; சபாநாயகர் ஆகலாம். அப்பாவு கிறிஸ்துவராக இருந்ததாலேயே, சபாநாயகர் பதவி கிடைத்தது. இல்லை என்றால், அவர் கோவிலில் மணி அடித்துக்கொண்டு தான் இருந்திருப்பார்' என, அந்த வீடியோ பதிவில், அவர் பேசி இருந்தார். அவரது பேச்சு, பதிவில் உள்ளபடியே, நம் நாளிதழில் கடந்த 9ம் தேதி செய்தியாக வெளியானது.இந்நிலையில் செய்தி தொடர்பாக, ஜார்ஜ் பொன்னையா அளித்து உள்ள விளக்கம்:தங்கள் நாளிதழில் என்னை பற்றிய போலியான செய்தி வெளியானது, கவனத்திற்கு வந்தது. தங்கள் யு டியூப் பக்கத்திலும், இதை பார்த்தேன். இத்தகைய உண்மைக்கு புறம்பான செய்தி, மக்கள் இடையே நிலவும் சமூக அமைதியை கெடுப்பதாக உள்ளது. இது, என் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக உள்ளது. இது ஆதாரமில்லாத செய்தி.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 38 )

saravanan samy
செப் 16, 2024 15:28

நடுவீட்டில் வைத்தாலும் ..... தான்


tmranganathan
செப் 16, 2024 07:26

இந்த பாதிரிமேல் பேரில் ஒரு கன்னியாஸ்த்ரீ தன்னை பலாத்காரம் செய்ததாக கொடுத்த புகாரின் பேரில் ஏன் அரசும் நடவடிக்கை எடுக்கவில்லை? அப்பாவும் லெனியும் அழுத்தம் கொடுத்தார்கள் அரசின் ஆதரவுடன் போலீஸ்க்கு? இதுதான் சமூக நீதியா? கேரளத்தில் ஒரு கன்னியாஸ்திரீயை கொன்றார் ஏன புகார் வந்தவுடன் அந்த பாதிரி பஞ்சாப் ஜலந்தரஇல் உள்ள சர்ச்சுக்கு மாற்றிவிட்டு இந்த ...கள் நாடகம் செய்தனர் கேரளாவில். வழக்கமாக இந்த வேடதாரிகள் கூட்டி பேருக்கும் பெண்களை விட்டுவைப்பதில்லை திருச்சி சர்ச்சில் நடந்து அபலைகள் குழாய் பெற்றார்கள். அப்பாவு என்ன சொல்லவரே?


Sivagiri
செப் 15, 2024 23:48

ஈ.டி.-ஐ அனுப்பி விஜாரித்தால் தேவலை , வெளிநாட்டு உள்நாட்டு வரவு செலவுகளை ஆராய்ந்தால் நல்லது . .


Mgan M
செப் 15, 2024 22:53

இந்த அன்னபூர்ணா ஓனர்கிட்டா கேக்கனும்??? 1 கப்பு மாவு ஊத்தி 1 கப்பு சாம்பார் குடுத்து இட்டிலின்னா 1செட் ரூ.40? அதே இட்டிலிக்கு கிண்ணத்துல சாம்பார் ஊத்தி சாம்பார் இட்லின்னா ரூ.55? அதே 1கப் மாவுல நீளம ஊத்தி தோசைன்னா ரூ.110 ? அதையவே குட்டையா ஊத்தோன ஊத்தாப்பம்னு ரூ.95 ? அதே தோசை மேல இட்டிலிக்கு தர்ர பொடிய தூவுண பொடி தோசைன்ணு ரூ.125 ? அதே 1 கப்பு மாவு அதே மாஸ்ட்டர் அதே gas ஒண்ணுமே புரியல கோவிந்தா???


Ramesh Sargam
செப் 15, 2024 21:50

எல்லா அயோக்கியர்களும் கூறுவது இதைத்தான் - ஆதாரமில்லாத செய்தி.


Tetra
செப் 15, 2024 21:07

இவன எப்பவோ தண்டிச்சு உள்ள போட்ருக்கணும். ஆனா ஆட்சி அவுகளுது ஆச்சே


M Ramachandran
செப் 15, 2024 13:38

இந்தா ஆள் இப்படி பேச இடம் கொடுத்தது யார்? எந்த தி தைய்யரித்தில் இப்பாடி பேசுகிறார். செய்யும் தொழிலைய்ய விட்டு தொழில் மாரி இறங்கியதை சர்ச் மேலிடம் கண்டிக்காதா


p.s.mahadevan
செப் 15, 2024 11:52

உண்மையான கிறிஸ்த்தவர் அனைவரையும் நேசிப்பார். இவர் ??


theruvasagan
செப் 15, 2024 11:29

நான் அப்படியெல்லாம் பேசலைன்னு சொன்ன பொய்யை கூட விட்டுவிடலாம். ஆனா என் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கிறார்கள் என்று சொன்னாரே. அந்த உலக மகா பொய்யை மன்னிக்கவே முடியாது.


பேசும் தமிழன்
செப் 15, 2024 11:05

இவன் ஏற்கனவே... இந்த அரசு கிறிஸ்தவர்கள் நாங்கள் போட்ட பிச்சை என்று எகத்தாளம் பேசிய ஆள் அல்லவா...இவனை உள்ளே பிடித்து போட வேண்டும்..... திருந்தாத ஜென்மம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை