உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பட்டா மாற்றம் விவகாரம்: சி.பி.ஐ., விசாரணை ரத்து

பட்டா மாற்றம் விவகாரம்: சி.பி.ஐ., விசாரணை ரத்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: நிலத்துக்கான பட்டாவில் பெயர் மாற்றம் செய்யாத விவகாரத்தில், சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட்டதை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.காஞ்சிபுரம் மாவட்டம் காலுார் கிராமத்தில் உள்ள, 3.92 ஏக்கர் நிலத்துக்கு, தங்கள் பெயரில் பட்டா வழங்கக் கோரி, உயர் நீதிமன்றத்தில், சங்கரநாராயணன், சத்தியநாராயணன், பானுமதி ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர். இந்த நிலம், ஆதிதிராவிடர்களுக்கான நலத்திட்டத்துக்காக கையகப்படுத்தப்பட்டது. பின், நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கை ரத்து செய்யப்பட்டது.அரசு பெயரில் பட்டா இருந்ததை, தங்கள் பெயருக்கு மாற்றி வழங்க, வாரிசுகள் மூவரும் கோரியிருந்தனர். மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி, இந்த விவகாரம் குறித்து, சி.பி.ஐ.,வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டார். இதை எதிர்த்து, ஆதிதிராவிடர் நலத்துறை செயலர், காஞ்சிபுரம் கலெக்டர் உள்ளிட்டோர் மேல்முறையீடு செய்தனர். இம்மனு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், கே.ராஜசேகர் அமர்வில்விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஆர்.ரமண்லால், சிறப்பு பிளீடர் செல்வேந்திரன் ஆஜராகி, ''ரிட் வழக்கின் வரம்பை மீறி, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.''புதிதாக நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கை துவங்கப்பட உள்ளது. எனவே, தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ய வேண்டும்,'' என்றனர்.நில உரிமையாளர்கள் தரப்பில், வழக்கறிஞர் பி.தினேஷ்குமார் ஆஜராகி, ''இந்த வழக்கை பொறுத்தவரை, ஏற்கனவே மேற்கொண்ட நிலம் கையகப்படுத்தல் நடவடிக்கையை, உயர் நீதிமன்றம் ரத்து செய்துவிட்டது. ''எனவே, முந்தைய நில உரிமையாளர்கள், தற்போதும் உரிமையாளர்களாக ஆகின்றனர். அவர்கள் தரப்பில் அளித்த விண்ணப்பத்தின்படி, பட்டா புத்தகத்தில் உரிய மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும்,'' என்றார்.மேல்முறையீட்டு மனுவை விசாரித்த, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:புதிதாக நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கையை மேற்கொள்ள, அரசுக்கு எந்த தடையும் இல்லை. தற்போதைய நிலையில், சங்கரநாராயணன், சத்தியநாராயணன், பானுமதி ஆகியோர் நில உரிமையாளர்கள். அவர்கள் சமர்ப்பித்த விண்ணப்பத்தின்படி, பட்டா பாஸ்புக்கில் உரிய மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும்.தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவில், சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டிருப்பது தேவையற்றது; அதற்கான சூழ்நிலை எதுவும் எழவில்லை. கட்டாய சூழ்நிலை ஏற்படும் வழக்குகளில் மட்டுமே, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட முடியும். வழக்கமான விஷயங்களுக்கு, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட முடியாது; மாநில போலீசாரே வழக்குப் பதிவு செய்ய முடியும்.எனவே, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட்டது ரத்து செய்யப்படுகிறது. சட்டப்படி, புதிதாக நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கையை அரசு மேற்கொள்ளலாம். இதற்கிடையில், பட்டா புத்தகத்தில் மாற்றம் கோரிய விண்ணப்பத்தையும் அரசு பரிசீலிக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Kasimani Baskaran
மார் 31, 2024 06:13

சிபிஐ விசாரணை என்றவுடன் ஏன் அரசு பின்வாங்குகிறது?


GMM
மார் 31, 2024 06:10

பட்டா புஸ்தகத்தில் உரிய மாற்றம் செய்ய வேண்டும் - அரசு நீதிபதி மாற்றம் கோரிய விண்ணப்பத்தை அரசு பரிசீலிக்க வேண்டும்- அதே நீதிபதி அரசியல் அமைச்சர், சேர்மன் குறிப்பு முறை அரசு பணி உத்தரவு வழங்க மட்டும் தான் ரிட் வரம்பு மீறி cbi விசாரணை ஏன் மாநில போலீசார் விசாரணைக்கு முன்பு உத்தரவு இல்லை? இழப்பீடு வழங்கும் முன் பட்டா மாறுதல் கூடாது


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ