உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழ் பெயர் பலகை வைக்காத அரசு ஆபீசுகளுக்கு அபராதம்

தமிழ் பெயர் பலகை வைக்காத அரசு ஆபீசுகளுக்கு அபராதம்

சென்னை : 'தமிழகத்தில் உள்ள அரசு நிறுவனங்களில் தமிழில் பெயர்ப்பலகை வைக்காவிட்டால், 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்' என, தமிழ் வளர்ச்சித் துறை எச்சரித்துள்ளது. தமிழகத்தில் உள்ள வணிக நிறுவனங்கள், அலுவலகங்களின் பெயர்ப் பலகைகளில் தமிழ் கட்டாயம் இடம்பெற வேண்டும் என, தமிழ் ஆட்சி மொழி சட்டம் வலியுறுத்துகிறது. ஆனால், இந்த சட்டத்தை பெரும்பாலான தனியார் நிறுவனங்களும், வியாபாரிகளும் மதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.இந்நிலையில் தற்போது, சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள அரசு துறைகள், மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் உள்ள துறைகளிலும், ஆங்கிலத்தில் மட்டுமே பெயர்ப்பலகைகள் இடம்பெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து தமிழ் வளர்ச்சித் துறை அதிகாரிகள் கூறியதாவது:

தமிழ் ஆட்சி மொழி சட்டம் அனைவருக்கும் பொதுவானது. அதை மீறுவது அரசு துறையாக இருந்தாலும், 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். அதனால், உடனே தமிழில் பெயர்ப்பலகையை வைக்க வேண்டும். ஆங்கிலத்திலோ மற்ற மொழிகளிலோ பெயர் பொறிக்க விரும்பினால், தமிழ், ஆங்கிலம், பிற மொழியில் 5:3:2 என்ற விகித அளவில் எழுதிக்கொள்ளலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

lana
ஜூலை 20, 2024 18:01

நாங்கள் என்ன சட்டம் கொண்டு வந்தாலும் அதன் பின்னர் காசு மட்டும்தான் குறி. தமிழ் பெயர் பலகை வைத்த வகையில் சில நூறு கோடி சுருட்ட திட்டம். உண்மையில் தமிழ் வளர்க்க வேண்டும் எனில் ஆரம்ப கல்வி இல் கவனம் செலுத்த வேண்டும்


lana
ஜூலை 20, 2024 18:01

நாங்கள் என்ன சட்டம் கொண்டு வந்தாலும் அதன் பின்னர் காசு மட்டும்தான் குறி. தமிழ் பெயர் பலகை வைத்த வகையில் சில நூறு கோடி சுருட்ட திட்டம்


venugopal s
ஜூலை 20, 2024 13:47

செய்தியை நன்றாகப் படியுங்கள்,இந்த உத்தரவு அரசு நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும், தனியார் நிறுவனங்களுக்கு அல்ல!


vadivelu
ஜூலை 20, 2024 14:32

சரியாக படித்தேன் .அதில் "தமிழகத்தில் உள்ள வணிக நிறுவனங்கள், அலுவலகங்களின் பெயர்ப் பலகைகளில் தமிழ் கட்டாயம் இடம்பெற வேண்டும் என, தமிழ் ஆட்சி மொழி சட்டம் வலியுறுத்துகிறது." என்று இருக்கிறது.அரசு அலுவலகங்களுக்கே அபராதம் என்றால் மற்றவர்களுக்கும் வர போகிறது என்று பொருள்.


Lion Drsekar
ஜூலை 20, 2024 13:13

பாராட்டுக்கள், அதே நேரத்தில் தமிழர்களால் நடத்தப்படும் தொலைக்காட்சி செய்திகளில் மற்றும் நிருபர்கள் "ல " உச்சரிக்கும்போது "ள" உச்சரிக்கிறார்கள், பொதுவாக ஆங்கிலம் மற்றும் வடமொழியைப் பயன்படுத்துகிறார்கள் . அவைகளையும் கவனித்தால் நன்றாக இருக்கும். வந்தே மாதரம்


RAAJ68
ஜூலை 20, 2024 13:00

அபராதம் யார் கட்டுப்படுத்துவது? அரசு தான் தமிழ் பலகைகளுக்கு ஏற்பாடு செய்து தர வேண்டும். உங்களுக்கு நீங்களே அபராதம் விதித்துக் கொள்வீர்களா.


அப்புசாமி
ஜூலை 20, 2024 10:55

ஆபீசு, அபராதம் ... தூய தமிழ்ச் சொற்கள்


Dharmavaan
ஜூலை 20, 2024 09:17

இதுவும் ஒரு ஒழி திணிப்பே ஹிந்தி திணிப்பு போல் .தனி மனித சுதந்திரத்தை பாதிக்கும் செயல்


Kasimani Baskaran
ஜூலை 20, 2024 07:43

தமிழில் பெயர்ப்பலகை ஆனால் தெலுங்கர்கள்தான் அதிக அளவில் எம்எல்ஏ / எம்பி க்கள். இது போன்ற முரண்பாடுகளுக்கு யார் தீர்வு காண்பது?


ஆரூர் ரங்
ஜூலை 20, 2024 07:24

உருது வில் பெயர் வைக்கலாம். ஆட்சேபணையில்லை.


S.kausalya
ஜூலை 20, 2024 07:17

ஊழல் இல்லாத அரசு நிர்வாகம் தான் வேண்டும்.மக்களுக்கு அது தான் தேவை. தமிழில் பெயர் பலகை வைத்து காப்பாற்ற வேண்டிய நிலையில் தமிழ் இல்லை.


மேலும் செய்திகள்