உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திமுக மீதான மக்கள் கோபத்தை மறைக்க மத்திய அரசுக்கு எதிராக போராட்டம்: இ.பி.எஸ்., பேட்டி

திமுக மீதான மக்கள் கோபத்தை மறைக்க மத்திய அரசுக்கு எதிராக போராட்டம்: இ.பி.எஸ்., பேட்டி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தூத்துக்குடி: 'தி.மு.க., மீது தமிழக மக்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். மக்களின் கோபத்தை மறைக்கவே மத்திய அரசுக்கு எதிராக திமுகவினர் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்' என அ.தி.மு.க., பொச்செயலாளர் இ.பி.எஸ்., கூறினார்.தூத்துக்குடி விமான நிலையத்தில், நிருபர்கள் சந்திப்பில் இ.பி.எஸ்., கூறியதாவது: தமிழகத்தில் நாளுக்கு நாள் போதையால் கொலைகள் அதிகரித்து வருகின்றன. கசாப்பு கடைகளில் ஆடுகளை வெட்டுவது போல் மனிதர்களை வெட்டுவது அதிகரித்துள்ளது. இது தமிழகத்திற்கு நல்லது அல்ல. தமிழகம் கொலை மாநிலமாக மாறி உள்ளது கவலை அளிக்கிறது. சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. போலீசாருக்கு முழு சுதந்திரம் அளித்து, சட்டம் ஒழுங்கை சீர்குலைவை தடுக்க வேண்டும். ஜனவரி 1ம் தேதி முதல் இதுவரை 565 கொலைகள் நடந்துள்ளன.

பாதுகாப்பு இல்லை

தமிழகத்தில் கொலை நடக்காத நாளே இல்லை. தமிழகத்தில் அரசியல் பிரமுகர்கள் மற்றும் பெண்கள் என யாருக்கும் பாதுகாப்பே இல்லாத சூழல் நிலவுகிறது. தி.மு.க., மீது தமிழக மக்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். தங்கள் மீதான கோபத்தை மறைக்க மத்திய அரசு மீது தி.மு.க., குற்றம் சாட்டுகிறது. மத்திய அரசுக்கு எதிராக திமுகவினர் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். மத்தியில் காங்கிரஸ் ஆட்சியிலும், பா.ஜ., ஆட்சியிலும் அங்கம் வகித்த கட்சி தி.மு.க. இவ்வாறு இ.பி,எஸ்., கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Durai Kuppusami
ஜூலை 29, 2024 08:09

உன்ன அப்படி பேச சொன்னாங்களா. நீ வாய தொறந்தாலே வெறுப்பா இருக்கு உனக்கு கருத்து போடவே பிடிக்கில......


Matt P
ஜூலை 28, 2024 20:38

போராட்டம் நடத்துவதனால் பட்ஜெட்டை மாற்றி எழுத போகிறார்களா? வேலையற்றவர்கள். மாநில அரசு, எந்த விளைவும் இதனால் ஏற்படுவதும் இல்லை என்று தெரிந்தும் போராட்டம் நடத்துகிறார்களென்றால் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு தேவையில்லாமல் பாதிப்பு ஏற்படுத்துகிறார்கள் என்பதற்காக ஆளுநர் அல்லது மத்திய அரசு மாநில அரசுக்கு ஏன் எச்சரிக்கை விடக்கூடாது? மாநில அரசின் பொறுப்பற்ற தண்மையையே இது காட்டுகிறது.


Santhakumar Srinivasalu
ஜூலை 28, 2024 19:55

கொரானா சமயத்தில் நீங்கள் வளர்த்து விட்ட நெட் வொர்க் தான் இது!


முருகன்
ஜூலை 28, 2024 19:02

மத்திய அரசுக்கு மறைமுகமாக உதவி செய்யும் உங்கள் உன்மை முகம் தெரிந்து தான் ஒவ்வொரு தேர்தலிலும் படுதோல்வி கிடைக்கிறது


Sainathan Veeraraghavan
ஜூலை 28, 2024 15:20

எடப்படியார் மிக துல்லியமாக திமுக அரசை கணித்து இருக்கிறார்கள். திமுக ஒருவிடியாத கட்சி . தமிழ்நாட்டுக்கு விமோசனம் இன்னும் 2 வருடங்களுக்கு இல்லை


Svs Yaadum oore
ஜூலை 28, 2024 14:46

கசாப்பு கடைகளில் ஆடுகளை வெட்டுவது போல் மனிதர்களை வெட்டுவது அதிகரித்துள்ளதாம்...தற்போதைய கொலை செய்திகள் நிலவரம் ..இது நிமிடத்துக்கு நிமிடம் மாற கூடியது ...நேற்று மட்டும்: கடலூரில் அதிமுக நிர்வாகி வெட்டி கொலை. சிவகங்கையில் பாஜக நிர்வாகி வெட்டி கொலை. கன்னியாகுமரியில் காங்கிரஸ் கவுன்சிலர் வெட்டி கொலை.


Svs Yaadum oore
ஜூலை 28, 2024 13:58

இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் விடியல் கழகம் கார்பொரேட் கம்பெனி முதலாளி சென்னையில் உள்ளார் .....அவர் என்ன கமர் கட் கடலை மிட்டாய் குடிசை தொழில் நடத்தி உழைத்து சம்பாதித்தாரா??....


Svs Yaadum oore
ஜூலை 28, 2024 13:58

பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்காகவும், அவர்களை பாதுகாப்பதாகவும், பணக்கார முதலாளிகளை வளர்த்து விடும் திட்டங்கள் மட்டுமே மத்திய அரசு பட்ஜெட்டில் உள்ளனவாம் .....இதை சொல்வது இந்தியா முழுக்க பகாசுர கார்பொரேட் கம்பெனி நடத்தும் விடியல் கழகம்...கப்பல் கம்பெனி ,கெமிகல் கம்பெனி, சாராய கம்பெனி , விமான கம்பெனி , ரியல் எஸ்டேட் , கந்து வட்டி , காலேஜ் , சினிமா , தொலைக்காட்சி என்று விடியல் செய்யாத தொழில் கிடையாது ..வடக்கன் மாநிலங்கள் முழுக்க விடியல் பிசினஸ் ....அப்ப மட்டும் வடக்கன் என்றால் விடியலுக்கு இனிக்கும் .....இவனெல்லாம் அடுத்தவனை குறை சொல்ல என்ன தகுதி ??....


Svs Yaadum oore
ஜூலை 28, 2024 13:57

இந்த தி மு க விடியலுக்கு கூட்டணி கட்சி இத்தாலி காங்கிரஸ் கர்நாடகாவிடம் காவேரி தண்ணீர் கேட்டு வாங்க வக்கில்லை. சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் கேரளா அரசை கேட்க நாதியில்லை ..ஆனால் இவர்கள் பா ஜா அரசை இறக்கி காட்டுவார்களாம் .....கிள்ளுக்கீரை என்று நினைத்து விட்டார்கள் ....


S. Narayanan
ஜூலை 28, 2024 13:36

40/40 வாங்கி விட்டோம் என்ற நிலை இப்போது 0/0 ஆகி விட்டது. திமுக 10 பைசா க்கு கூட பிரயோஜனம் இல்லை என்று மக்கள் முடிவுக்கு வந்து விட்டார்கள். விடியலே வா வா திமுக வே போ போ திரும்பி வராதே என்ற மன நிலைக்கு மக்கள் வந்து விட்டார்கள்


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி