மேலும் செய்திகள்
வள்ளல் தகடூர் அதியமான் பெயரை எழுதிய நெடுஞ்சாலைத்துறை
17 minutes ago
தி.மலையில் தரிசனத்துக்கு 6 மணி நேரம் காத்திருப்பு
2 hour(s) ago
சென்னை:பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் நேற்று நிறைவு பெற்றன. உயிரியல் பாட வினாத்தாள் எளிதாக இருந்ததாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வு, இந்த மாதம், 1ம் தேதி துவங்கியது. நேற்று இறுதி தேர்வு நடந்தது.உயிரியல், தாவரவியல், வணிக கணிதம் மற்றும் புள்ளியியல், டெக்ஸ்டைல் டெக்னாலஜி, வரலாறு, அலுவலக மேலாண்மை, தொழிற்கல்வி இன்ஜினியரிங் பாடங்கள் ஆகியவற்றுக்கு, நேற்று தேர்வுகள் நடந்தன.இவற்றில், அதிக மாணவர்கள் பங்கேற்ற உயிரியல் மற்றும் தாவரவியல் பாடங்களுக்கான வினாத்தாள் மிகவும் எளிமையாக இருந்ததாக, ஆசிரியர்களும், மாணவர்களும் தெரிவித்தனர்.வினாத்தாளின் தன்மை குறித்து, சென்னை அயனாவரம் டபிள்யு.பி.ஏ., சவுந்தரபாண்டியனார் மேல்நிலை பள்ளி ஆசிரியர் சவுந்தர பாண்டியன் கூறியதாவது:ஒவ்வொரு ஆண்டும் உயிரியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடவினாத்தாள்கள் சற்று கடினமாக இருக்கும். இந்த முறை, மாணவர்கள் ஓரளவு விடைகளை எளிதாக எழுதும் வகையில், வினாத்தாள் எளிதாக இருந்தது. வினாத்தாளை பொறுத்தவரை, அனைத்து வகை வினாக்களும் கலந்திருந்தன. வரைபடம், புதிய வினாக்கள், மாணவர்களின் சிந்தனையை சோதிக்கும் வினாக்கள், பாடத்தின் உள் பகுதியில் உள்ள வினாக்கள் என, அனைத்தும் குழப்பமின்றி, நேரடி னாக்களாக இருந்தன.இந்த வினாத்தாளால், மாணவர்களின் தேர்ச்சி அதிகரிக்கும். நன்றாக தயாரான மாணவர்கள், 100 சதவீத மதிப்பெண் பெறலாம்.இவ்வாறு அவர் கூறினார்.
17 minutes ago
2 hour(s) ago