உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இது எல்லாம் ஒரு சாதனையா; அரசு வெட்கப்படணும்; அன்புமணி காட்டம்!

இது எல்லாம் ஒரு சாதனையா; அரசு வெட்கப்படணும்; அன்புமணி காட்டம்!

சென்னை: பொங்கலையொட்டி 3 நாட்களில் ரூ.725 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளதன் மூலம் தமிழக மக்களை குடிக்கு அடிமையாக்கியது தான் திராவிட மாடல் சாதனை என்று பா.ம.க.,தலைவர் அன்புமணி குற்றம்சாட்டி உள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை; தமிழகத்தில் பொங்கல் திருநாளையொட்டி, கடந்த 13, 14, 16 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் கடைகள் வாயிலாக மட்டும் ரூ.725 கோடிக்கு மது விற்பனையாகி இருப்பதாகவும், இது கடந்த ஆண்டின் விற்பனை அளவான ரூ.678.65 கோடியை விட ரூ.47 கோடி அதிகம் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன. இது நிச்சயம் மகிழ்ச்சியளிக்கும் செய்தி அல்ல. கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் இன்னும் அதிக குடும்பங்கள் கண்ணீர் வடித்திருக்கின்றன என்பதையே இந்த செய்தி காட்டுகிறது. ஒரு சொட்டு மது இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்பது தான் ராமதாசின் நோக்கம். அதற்காகத் தான் அவர் கடந்த 45 ஆண்டுகளாக போராடி வருகிறார்.ஆனால், தமிழகத்தை ஆள்பவர்களோ, தமிழகத்தில் ஒருவர் கூட மது குடிக்காதவர்களாக இருக்கக் கூடாது என்ற எண்ணத்தில், அனைவரையும் மதுவுக்கு அடிமையாக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் விளைவு தான் கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் மது வணிகம் கடுமையாக அதிகரித்திருக்கிறது.கடந்த ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1000 வழங்கப்பட்டது. ஆனால், நடப்பாண்டில் பொங்கல் பரிசுத் தொகுப்பில் பணம் வழங்கப்படவில்லை. ஆனாலும், மது வணிகம் ரூ.47 கோடி அதிகரித்திருக்கிறது என்பதன் மூலம் மது குடிக்காமல் இருக்க முடியாது என்ற நிலையில் இருப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது. தமிழக இளைஞர்களை நிரந்தர குடிகாரர்களாக்கியது மட்டும் தான் திராவிட மாடல் அரசின் சாதனை ஆகும். ஒருபுறம் போதையின் பாதையில் யாரும் போகக் கூடாது; தீமை என்று தெரிந்தும் அதை விலை கொடுத்து வாங்கலாமா? என்று ஒரு புறம் தொலைக்காட்சி விளம்பரங்களில் முதல்வர் ஸ்டாலின் முழங்கிக் கொண்டிருக்கிறார். இன்னொருபுறம் பொங்கல் திருநாளில் கூட மதுக்கடைகளை திறந்து வைத்து இளைஞர்களையும், மாணவர்களையும் மதுவுக்கு அடிமையாக்கி வருகிறார். இத்தகைய இரட்டை வேடத்தை ஸ்டாலினை தவிர வேறு எவராலும் நடிக்க முடியாது.கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் தான் மது விற்பனை மிக அதிகமாக உயர்ந்திருக்கிறது என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன. பத்தாம் வகுப்பு, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளின் தேர்ச்சி விகிதத்தில் இந்த மாவட்டங்கள் தான் கடைசி இடத்தில் இருக்கின்றன.அந்த மாவட்டங்களை கல்வியில் உயர்த்துவதற்கு எந்த நடவடிக்கையையும் எடுக்காத தி.மு.க., அரசு, அந்த மாவட்டங்களை மதுவில் மூழ்கடிப்பதில் தான் அதிக ஆர்வம் காட்டி வருகிறது. இதற்காக தமிழக ஆட்சியாளர்கள் வெட்கப்பட வேண்டும்.தமிழகத்தில் மூலைக்கு மூலை கஞ்சாவும், மதுவும் தான் தாராளமாக கிடைக்கின்றன. அதனால் தமிழகம் சீரழிவை நோக்கி வேகமாக பயணித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையை மாற்ற தமிழகத்தில் உள்ள மதுக்கடைகளை படிப்படியாக மூடி மதுவிலக்கை ஏற்படுத்த வேண்டும். கஞ்சா புழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Ethiraj
ஜன 19, 2025 07:52

In few years tamilian population will be wiped clean It will be land of INDIANS ALL YOUTH FROM ALL OVER INDIA WILL TAKEOVER TN. TN is the only state govt promoting liquor consumption and marketting liquor Privatise TAEMAC ,PDS and Transport corporation.to increase revenue and reduce wastage of revenue


Mediagoons
ஜன 18, 2025 21:52

மோடி செய்வது மட்டும் 5ஹான் சாதனையா?


Ramesh Sargam
ஜன 18, 2025 20:17

பொங்கலையொட்டி 3 நாட்களில் ரூ.725 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளன. இதற்காக தமிழக அரசு வெட்கி தலைகுனியவேண்டும். மக்களை குடிக்கவைத்து அவர்களை எப்பொழுதும் குடிபோதையில் வைத்திருப்பதுதான் உங்கள் சாதனையா? சீ சீ... மானம்கெட்டவர்களே...


Vijay
ஜன 18, 2025 19:42

திமுகவுக்கு நன்றாக தெரியும் தங்களுக்கு ஓட்டு போட தமிழர்களின் விலை வெறும் 2000/- தான்.


joe
ஜன 18, 2025 17:12

இந்த ஸ்டாலின் பரம்பரையே மக்களை ஏமாற்றிப்பிழைக்கும் நய வஞ்சக அரசியல் வியாபாரம் என்பது -இவங்கப்பன் காலத்திலிருந்தே அவனுகளோட ரத்தத்தில் ஊறிப்போன சமாசாரம் .மானங்கெட்ட அரசியல்வாதிகள்.


ராமகிருஷ்ணன்
ஜன 18, 2025 15:06

அன்பு மணிக்கு கடலூர், விழுப்புரம் வன்னியர்களின் காசு டாஸ்மாக் மூலம் அரசுக்கு போயிட்டு திமுகவின் அமைச்சர்களின் கறுப்பு பணமாக மாறி விட்டது என்று புலம்பி உள்ளார்


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 18, 2025 15:02

நீங்க டெயிலி காறிடூப்பி காறிடூப்பி உங்க உமிழ்நீரே தீர்ந்திருக்கும் .... அதப்பாருங்க டாக்டர் சாஹப் .....


Rajan A
ஜன 18, 2025 14:20

மது ஒழிப்பை கை விட்டால்தான் தேர்தலில் வெற்றி பெறமுடியும். இத பிராசாந்த் கிஷோர் அறிவுரையாக இருக்கலாம்.


Svs Yaadum oore
ஜன 18, 2025 14:17

கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் தான் மது விற்பனை மிக அதிகம் ..பள்ளி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளின் தேர்ச்சி விகிதத்தில் இந்த மாவட்டங்கள் தான் கடைசி ......தமிழகத்தில் மூலைக்கு மூலை கஞ்சாவும், மதுவும் தாராளாமாம் ....இதுக்கெல்லாம் விடியல் திராவிடனுங்க என்ன செய்வானுங்க ??.....சாராய கம்பெனி நடத்தறவனை எல்லாம் வோட்டு போட்டு விடியல் மந்திரிகளாக தேர்ந்தெடுத்தால் இப்படி சாராயம்தான் விற்பார்கள் .....


அப்பாவி
ஜன 18, 2025 14:13

இருக்கேன் வெக்கம்? குடிகாரத் திராவிடன்களுக்கு எங்கே போச்சு புத்தி? நீ வந்து ஃப்ரீயா குடுத்து மது விற்பனை இல்லாம பண்னிரிவியா?


TAMILAN
ஜன 19, 2025 01:20

டேய் அறிவு கெட்ட முண்டம் உன் வீட்ல யாராவது குடியால செத்தா அப்ப தெரியும் உனக்கு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை