உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காவல்துறை செயலி முடக்கம்

காவல்துறை செயலி முடக்கம்

சென்னை:தமிழக காவல்துறையின் செயலி முடக்கப்பட்டு, பாஸ்வேர்டு திருடப்பட்டிருப்பது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.குற்றவாளிகள், காணாமல் போனவர்கள், சந்தேகத்துக்குரிய நபர்களின் தரவுகள் அனைத்தும், எப்.ஆர்.எஸ்., எனப்படும் 'பேஸ் ரெகக்னிஷன் போர்ட்டல்' என்ற முக அடையாள மென்பொருள் இணையதளத்தில், தமிழக போலீசாரால் பதிவேற்றம் செய்யப்படுகிறது.இந்த முக அடையாளம் காணும் மென்பொருளானது, தனி நபரின் புகைப்படத்தை காவல் நிலையங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள தரவுகளோடு ஒப்பிட்டு அடையாளம் காண பயன்படுகிறது. தமிழக காவல் துறையின் முக அடையாளம் காணும் செயலி, ஹேக்கர்களால் முடக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, தமிழக காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: எப்.ஆர்.எஸ்., மென்பொருள் சிடாக் கோல்கட்டா நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. இவற்றை, 46,122 பயனாளிகள் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது, எப்.ஆர்.எஸ்., இணையதளத்தில் விதிமீறல் இருப்பதாக ஒரு முகவரியில் இருந்து தகவல் வந்தது. இது தொடர்பான முதற்கட்ட விசாரணையில், அட்மின் அக்கவுன்டில் பாஸ்வேர்டு ஹேக்கர்களால் திருடப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.இந்த அட்மின் அக்கவுன்டில், பயனாளிகளுக்கான ஐ.டி.,யை உருவாக்குதல், எவ்வளவு தேடுதல் எண்ணிக்கை மேற்கொள்ளப்பட்டது போன்ற விபரங்களை மட்டுமே பார்க்க முடியும். இந்த பயனாளி அக்கவுன்ட் முடக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து, சென்னை சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை