உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தில் முறைகேடு: 13 அதிகாரிகளுக்கு எதிராக அரசு நடவடிக்கை

பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தில் முறைகேடு: 13 அதிகாரிகளுக்கு எதிராக அரசு நடவடிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'பிரதமரின் வீட்டுவசதி திட்டத்தில், நிதி முறைகேடு செய்ததாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த, 13 அதிகாரிகளுக்கு எதிரான துறை ரீதியான நடவடிக்கை தொடர்பாக, இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும்' என, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு, பிரதமர் வீட்டுவசதி திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதியை கையாடல் செய்த அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை கோரி, உயர் நீதிமன்றத்தில், கங்காதரன் என்பவர், 2021ல் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், நீதிபதி பி.பி.பாலாஜி அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது.

அறிக்கை தாக்கல்

மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் டி.திருமூர்த்தி ஆஜரானார். அரசு தரப்பில், அரசு பிளீடர் எட்வின் பிரபாகர் ஆஜராகி, கிருஷ்ணகிரி கலெக்டரின் அறிக்கையை தாக்கல் செய்தார்.அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:வெவ்வேறு நிலைகளில் பணியாற்றும், 22 அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை துவக்கப்பட்டது. விசாரணை அதிகாரி தாக்கல் செய்த அறிக்கையின்படி, 13 பேருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு உள்ளன. அவர்களிடம் விளக்கம் பெறப்பட்டு, ஊரக வளர்ச்சித் துறை இயக்குனரகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இழப்பை வசூலிப்போம்

இயக்குனரகத்திடம் குறிப்புகள் பெற்றபின், துறை ரீதியான நடவடிக்கைக்கான உத்தரவு பிறப்பிக்கப்படும். இழப்பை வசூலிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இதை பதிவு செய்தபின், முதல் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவில், 'தவறு செய்த அதிகாரிகளுக்கு எதிராக ஏற்கனவே நடவடிக்கை துவங்கி விட்டதால், மேற்கொண்டு எந்த உத்தரவும் பிறப்பிக்கத் தேவையில்லை. 'இந்த திட்டத்தின் கீழ், மேற்கொண்டு எந்த முறைகேடும் நடந்திருப்பது, மனுதாரரின் கவனத்துக்கு வந்தால், உரிய நடவடிக்கைக்காக சம்பந்தப்பட்ட அதிகாரியை அணுகலாம்' என, கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

அப்புசாமி
ஆக 18, 2024 08:35

என்னாது?/2023 க்குள்ளாற எல்காருக்கும்.வூடு குடுத்து முடிச்சாச்சே. எனக்கு கூட கிடைச்சுதே. முன்னாடி கூட 15 லட்சம் கிடைச்சுதே.


Kasimani Baskaran
ஆக 18, 2024 07:45

முறைகேடு செய்த தொகையை திரும்ப கொடுத்து விட்டால் உத்தமர் என்று விருது கூட கொடுப்பார்கள். மாடல் அரசில் யோக்கியர்கள் தான் கெட்டவர்கள் என்பது ஒரு ஏற்றுக்கொள்ளப்பட்ட கோட்பாடு. 13 அதிகாரிகளையும் சிறையில் பதாண்டுகளாவது அடைத்து அவர்கள் குடும்பத்தில் இருந்து அரசு வேலைக்கு யாரும் விண்ணப்பிக்கக்கூட முடியாத நிலை வந்தால் நீதிமன்றம் வேலை செய்கிறது என்று சொல்லலாம். நீதிமன்றம் கூட இவன் மட்டுமா குற்றம் செய்தான் என்ற நிலைக்கு வந்துவிட்டது வெட்டவெளிச்சம்.


அப்பாவி
ஆக 18, 2024 10:19

திருட்டு திராவிடனுங்க புறங்கையை நக்கமாட்டார்கள். முழுசா தேனை குடிச்சிட்டு மக்களுக்கு நக்குவதற்கு மீதி இருந்தால் குடுப்பாங்க.


Indhuindian
ஆக 18, 2024 06:32

தேனை எடுத்தவன் புறங்கையை நக்காமா இருப்பானா அதுவும் திராவிட மாடல்ல


மேலும் செய்திகள்