உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பிரதமர் பதவி: என் உயரம் எனக்கு தெரியும்:ஸ்டாலின் பதில்

பிரதமர் பதவி: என் உயரம் எனக்கு தெரியும்:ஸ்டாலின் பதில்

சென்னை பிரதமர் பதவி குறித்த கேள்விக்கு என் உயரம் எனக்கு தெரியும் என பதில் அளித்த முதல்வர் ஸ்டாலின் இந்தியா கூட்டணி தலைவர்களின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க டில்லி செல்ல உள்ளதாக கூறினார். தேர்தல் முடிவை அடுத்து அண்ணா அறிவாலயத்திற்கு வருகை தந்தார் முதல்வர் ஸ்டாலின் . தொடர்ந்து அவர் பேசியதாவது: திமுக கூட்டணி நாற்பதுக்கு நாற்பது தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. இந்தியா கூட்டணிக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி. வெற்று பரப்புரைகளுக்கு எதிராக மக்கள் அளித்த தீர்ப்பு இந்த வெற்றி . இந்திய ஜனநாயகத்தையும் அரசியல் சாசனத்தையும் திமுக தொடர்ந்து பங்காற்றும். பா.ஜ.,வின் பண பலம் தேர்தலில் எதிரொலிக்க வில்லை, பிரதமர் பதவி பற்றிய கேள்விக்கு என் உயரம் எனக்கு தெரியும் என்றார். 400 இடங்களில் வெற்றி பெறுவோம்என கூறிய பா.ஜ.,வால் பெரும்பான்மை கூட பெற முடியவில்லை, மேலும் இந்தியா கூட்டணி தலைவர்களின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க டில்லி செல்ல உள்ளதாக ஸ்டாலின் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Nagercoil Suresh
ஜூன் 05, 2024 02:07

பள்ளி காலங்களில் மாணவர்களின் உயரத்தை அளப்பதற்கு ஆசிரியர்கள் மாணவர்களை சுவரோடு சேர்த்து நிறுத்தி ஒரு ஸ்கேல் ஒண்ணை வைத்து தலையில் அமுக்கி சுவரில் ஒரு அடையாளத்தை போடுவர் அதன் பின் அதை அளவு எடுப்பார் ஆனால் இது ஒவ்வொரு இடத்திலும் இடத்திற்கேற்ப வேறுபடுவதுண்டு முதல்வர் ஸ்டாலின் தந்தையார் கூறியதையே கூறியிருக்கிறார் எதுவாக இருந்தாலும் சராசரி தேசிய வளர்ச்சியிலிருந்து குறைந்தது 5 சதவீத வளர்ச்சியை அதிகமாக ஸ்டாலின் கொடுக்காமல் இருந்தால் வரும் தேர்தலில் மக்கள் முகம் சுளிக்க ஆரம்பித்துவிடுவார்கள்...


அருண், சென்னை
ஜூன் 04, 2024 23:08

கண் பார்வை மட்டுமே போதும்


Kumar Kumzi
ஜூன் 04, 2024 22:18

ஆமா துண்டுசீட்டு பெருமைகள் வெளியே தெரிய வந்தால் காறித்துப்பி விடுவார்கள் என்ற பயமா விடியல் ஹீஹீஹீ


ஆரூர் ரங்
ஜூன் 04, 2024 22:08

அதிகபட்ச உயரம் காண்டீன் மேஜை.


Jai
ஜூன் 04, 2024 21:45

தங்கள் உயரம் தெரிந்ததே. 50 வருடங்களாக அரசியலில் மட்டுமே இருந்துள்ளீர்கள் வேற எந்த தொழிலோ வேலையோ செய்ததில்லை. அரசியல் பற்றியோ கட்சி பற்றியோ, ஆட்சி பற்றியோ, பத்து நிமிடங்கள் தாங்கள் உரையாற்றுவீர்கள் என்று இன்னும் காத்திருக்கிறோம்.


sankar
ஜூன் 04, 2024 21:10

ஊழல்வாதிகளை ஆதரிக்க முடிவு செய்த மக்களை நினைத்து வருந்துவதைத்தவிர வேறு வழி இல்லை


SUBBU,MADURAI
ஜூன் 04, 2024 20:31

ஆமா உன் அப்பா மூப்பனார் என்ற தமிழரை முதல்வராக்கும் நிலையில் இருந்த போதும் காழ்புணர்ச்சியினால் அவரை புறம் தள்ளியது அனைவரும் அறிந்ததே அப்படி இருக்கும் போது நீ எப்படி பிரதமர் என்ற கனவை கூட காண முடியும் கர்மா உன் பின்னால் உன்னை துரத்திக் கொண்டு வருவதை நீ உணர வாய்ப்பில்லை!


Ramesh Sargam
ஜூன் 04, 2024 19:57

"என் உயரம் எனக்கு தெரியும்". தெரிந்தால் கூறவேண்டியதுதானே...


SUBBU,MADURAI
ஜூன் 04, 2024 19:47

தமிழகத்தில் பெரும்பான்மையாக உள்ள இந்துக்களை விட சிறுபான்மையினரான கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் வலிமை மிக்கவர்கள் என்பதை நடந்து முடிந்த இந்த பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் நமக்கு உணர்த்தியிருக்கிறது.


இராம தாசன்
ஜூன் 04, 2024 22:46

இப்போது அது ஊர்ஜித படுத்தப்பட்டுள்ளது - கடந்த இரண்டு தேர்தலில் வெற்றி தோல்வியை அவர்கள் நிர்ணயிக்கிறார்கள். இந்துக்கள் ஜாதிவாரியாக பிரிந்து கிடைக்கும் வரை இந்த நிலை தான். அரசியல் வாதிகள் இந்துக்களை ஒன்று சேர விடமாட்டார்கள்


Jai
ஜூன் 04, 2024 19:40

எது எப்படியோ 21 சீட்டு வாங்கிய கட்சிக்கு நல்ல மரியாதை கிடைக்கும் தான்.


மேலும் செய்திகள்









புதிய வீடியோ