உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வெள்ள பாதிப்பு நிவாரணம் ரூ.1487 கோடி வழங்கல்

வெள்ள பாதிப்பு நிவாரணம் ரூ.1487 கோடி வழங்கல்

சென்னை:புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 25 லட்சம் குடும்பங்களுக்கு, 1,487 கோடி ரூபாய் நிவாரண தொகை வழங்கப்பட்டிருப்பதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.சென்னை கன்னிகாபுரத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ராமதாஸ் என்பவர் தாக்கல் செய்த மனுவில், 'மிக்ஜாம் புயலால், சென்னையில் பெரும்பாலான பகுதிகள் பாதிக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு, ரேஷன் கடைகள் வாயிலாக, 6,000 ரூபாய் நிவாரணமாக வழங்குவதாக அரசு அறிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்களின் வங்கி கணக்கில் தொகையை செலுத்தும்படி உத்தரவிட வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது.நிவாரண தொகையை அதிகரித்து, வங்கி கணக்கு வாயிலாக வழங்கக்கோரி, சட்டக் கல்லுாரி மாணவர் செல்வகுமார் என்பவரும் வழக்கு தொடர்ந்திருந்தார்.இம்மனுக்கள், தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தன. பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் சேருவதை உறுதி செய்யும்படி அரசுக்கு அறிவுறுத்தி, விரிவான அறிக்கை அளிக்கவும் உத்தரவிட்டது.இவ்வழக்கு, தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அமர்வில், நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், கூடுதல் அட்வகேட் ஜெனரல் ரவீந்திரன் ஆஜராகி, ''சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களை சேர்ந்த 24.25 லட்சம் குடும்பங்களுக்கு, 1,455 கோடி ரூபாய் நிவாரணம், ஜனவரியில் வழங்கப்பட்டு விட்டது. பின், 53 ஆயிரம் குடும்பங்களுக்கு 31.73 கோடி ரூபாய் வழங்கப்பட்டது,'' என்றார்.இதையடுத்து, நிவாரணம் வழங்கப்பட்டது குறித்த முழுமையான அறிக்கை அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை, ஏப்.,17க்கு, முதல் பெஞ்ச் தள்ளி வைத்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி