உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கள்ளச்சாராய விவகாரம் தண்டனை கடுமையாகும்: ஸ்டாலின்

கள்ளச்சாராய விவகாரம் தண்டனை கடுமையாகும்: ஸ்டாலின்

சென்னை:''கள்ளச்சாராய குற்றங்களுக்கு கடும் தண்டனை வழங்க, சட்டசபையில் இன்று சட்ட திருத்தம் கொண்டு வரப்படும்,'' என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.சட்டசபையில் நேற்று காவல், தீயணைப்பு துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய பா.ம.க., சட்டசபை குழுத் தலைவர் ஜி.கே.மணி, ''தமிழகம் முழுதும் டாஸ்மாக் மதுக் கடைகள் உள்ள பகுதிகளில், சந்து கடைகளில் மது விற்கப்படுகிறது. காவல் துறைக்கு தெரியாமல் இது நடக்க வாய்ப்பில்லை. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவுகளுக்கு காரணமானவர்களை கண்டறிந்து, கடும் தண்டனை வழங்க வேண்டும்,'' என்றார்.அதற்கு முதல்வர் ஸ்டாலின் அளித்த பதில்:சட்டசபை கூட்டத் தொடர் துவங்கியதில் இருந்து கள்ளக்குறிச்சி விவகாரத்தைத் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறோம்.பா.ம.க., - எம்.எல்.ஏ., - ஜி.கே.மணியும் இந்த விவகாரத்தை மீண்டும் பேசத் துவங்கியிருக்கிறார். என்னைப் பொறுத்தவரை, உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய பொருட்களைக் காய்ச்சுதல், விற்பனை செய்வது போன்ற குற்றங்களுக்கான தண்டனை, போதுமானதாகவும், கடுமையாகவும் இல்லை. இதுபோன்ற குற்றங்களுக்கு வழங்கப்படும் தண்டனையை கடுமையாக்கி, இக்குற்றங்களை முற்றிலும் தடுக்க, முதற்கட்டமாக, 'தமிழ்நாடு மது விலக்குச் சட்டம் 1937'ல் திருத்த மசோதா, சட்டசபையில் சனிக்கிழமை அறிமுகம் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ