உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எந்த அடிப்படையில் ரேஷன் பருப்பு கொள்முதல்? அரசு விளக்கம் அளிக்க ஐகோர்ட் உத்தரவு

எந்த அடிப்படையில் ரேஷன் பருப்பு கொள்முதல்? அரசு விளக்கம் அளிக்க ஐகோர்ட் உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: மசூர் பருப்பை குறைந்த விலையில் மாநிலங்களுக்கு விற்பனை செய்ய உள்ளதால், அதை அந்தந்த மாநிலங்கள் பொது வினியோக திட்டத்தில் வினியோகிக்கலாம் என, அனைத்து மாநிலங்களுக்கும், மத்திய உணவு துறை கடிதம் எழுதியது.

தடை வேண்டும்

இந்நிலையில், 'பொது வினியோக திட்டத்துக்கான இ- டெண்டரில், தமிழக அரசு மசூர் பருப்பை சேர்க்கவில்லை; கனடா மஞ்சள் பருப்பை கொள்முதல் செய்யும் டெண்டரை உறுதி செய்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்' என, சென்னை, ராயபுரத்தை சேர்ந்த ஸ்ரீ சாய்ராம் இம்பெக்ஸ் நிறுவனத்தின் பிரதிநிதி ஆறுமுகம், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.இந்த மேல்முறையீட்டு மனு, பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன், நீதிபதி முகமது சபீக் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன் விசாரணைக்கு வந்தது.மனுதாரர் நிறுவனம் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஓம் பிரகாஷ் ஆஜராகி, ''மசூர் பருப்பை கொள்முதல் செய்ய, மாநில அரசு மறுத்துள்ளது. மசூர் பருப்பில் கூடுதல் ஊட்டச்சத்து உள்ளது. ஆனால், அந்த பருப்பை கொள்முதல் செய்யாததற்கு உரிய காரணத்தை அரசு தெரிவிக்கவில்லை. விலை குறைந்த இந்த பருப்பை வாங்கினால், மாநில அரசுக்கு மாதத்துக்கு 150 கோடி ரூபாய் வரை மிச்சமாகும்,'' என்றார்.இதற்கு அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகி, ''தமிழக மக்கள் மசூர் பருப்பை விட, துவரம் பருப்பையே அதிகம் விரும்புகின்றனர். அதனால், விவசாயிகளிடம் இருந்து துவரம் பருப்பு கொள்முதல் செய்யப்படுகிறது.தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், மசூர் பருப்பு கொள்முதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அந்த பருப்பை மறுக்கவும் இல்லை. எதிர்காலத்தில் தேவை ஏற்பட்டால் மசூர் பருப்பும் கொள்முதல் செய்யப்படும்,'' என்றார்.இதை கேட்ட நீதிபதிகள், எந்த அடிப்படையில் பொது வினியோக திட்டத்தில் பருப்பு கொள்முதல் செய்யப்படுகிறது என்பது குறித்து, இரண்டு வாரங்களில் அரசிடம் விளக்கம் பெற்று தெரிவிக்கும்படி, அட்வகேட் ஜெனரலுக்கு உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

RG GHM
ஜூன் 16, 2024 17:16

மசூர் பருப்பு ஆரோக்கிய குறை ப்பாடு உள்ள பருப்பு. துவரை அப்படி இல்லை.


Suppan
ஜூன் 16, 2024 12:59

அதாங்க கமிஷன் அடிப்படையிலதான். இது ஒட்டு மொத்த உலகத்துக்கே தெரிஞ்ச திராவிட மாடல் ஆச்சே


Ramesh Sargam
ஜூன் 16, 2024 12:07

அரசின் விளக்கம் ஏற்கமுடியாத பட்சத்தில், நீதிமன்றம் என்ன செய்யும்? அரசை தண்டிக்குமா?


Anantharaman Srinivasan
ஜூன் 16, 2024 11:16

மசூர் பருப்பை தமிழக மக்கள் விரும்புவதில்லை என்பது உண்மை. அரசு ரேஷனில் துவரம் பருப்பு தான் வழங்க வேண்டும்.


Kasimani Baskaran
ஜூன் 16, 2024 09:51

எந்த அடிப்படை என்பது கூட தெரியாதது போல கேட்டு நக்கல் செய்வது ரொம்பவே ஓவர்..


karupanasamy
ஜூன் 16, 2024 08:39

கன்னடா பருப்பு இறக்குமதிக்கு தடைவிதிச்சுக்குங்க ஒன்னும் பிரச்னை இல்லை நாங்க உச்ச நீதிபதி கிட்ட பெர்மிஷன் வாங்கிக்குறோம்.


GMM
ஜூன் 16, 2024 07:48

கட்சியினருக்கு வரும் கமிசன் அடிப்படையில் பருப்பு கொள்முதல் ஏற்றால், நீதிமன்றம் கோபப்படும், தண்டித்து விடும். மக்கள் விருப்ப மனு அடிப்படையில் கொள்முதல். விளக்கத்தை ஏற்க வேண்டும்.


RAAJ68
ஜூன் 16, 2024 07:42

அடிப்படை எதுவும் இல்லை. கமிஷன் எங்கு அதிகம் கிடைக்கிறதோ அங்கே நாங்கள் ஊழல் செய்வோம். ஊழலின் மறு பெயர் திமுக.


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை