உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னையிலும் ரெய்டு

சென்னையிலும் ரெய்டு

கடந்த, 2020ம் ஆண்டு, தேசிய மருத்துவ கவுன்சில், 'நாடு முழுதும், தரமான மருத்துவ கல்லுாரிகள் துவங்கப்பட வேண்டும்' என, பல்வேறு விதிமுறைகளை கொண்டு வந்தது. தமிழக சுகாதாரத்துறை ஆய்வு நடத்தி வழங்கும் சான்றிதழ் அடிப்படையில் தான் மத்திய அரசு அனுமதி வழங்கும். அந்த வகையில், அ.தி.மு.க., ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர், வேல்ஸ் மருத்துவ கல்லுாரி துவங்க, முறைகேடாக சான்றிதழ் வழங்கி உள்ளார்.இது தொடர்பாக, லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரித்து, வேல்ஸ் கல்வி குழுமத்தின் தலைவர் ஐசரி கணேஷ், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உட்பட ஏழு பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது. அமலாக்கத்துறை அதிகாரிகளும் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதை தொடர்ந்து, சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள, ஐசரி கணேஷ் வீடு மற்றும் வேல்ஸ் நிறுவனத்தின் கார்ப்பரேட் அலுவலகம், மருத்துவ கல்லுாரி உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.அதுபோல, சென்னை, ஆழ்வார்பேட்டை டி.டி.கே. சாலையில், 'ஜி ஸ்கொயர்' என்ற கட்டுமான நிறுவனத்தின் இயக்குனர் பாலாவின் நீலாங்கரை வீடு, பாலாவின் நண்பர் புருஷோத்தம்மன் வீடு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில், அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை