உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இரு நாட்களுக்கு மழை தொடரும்

இரு நாட்களுக்கு மழை தொடரும்

சென்னை:'மேற்கு திசை காற்று மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை தொடரும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அந்த மையம் வெளியிட்ட அறிக்கை: தமிழகம், புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாகக் குறைந்து வருகிறது. மேற்கு திசை காற்றில் வேக மாறுபாடு காணப்படுவதால், தமிழகத்தில் ஒரு சில இடங்கள், புதுச்சேரி, காரைக்காலில் அடுத்த இரண்டு நாட்களுக்கு இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஜூலை 11 வரை தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில், லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம். சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்; ஒரு சில பகுதிகளில் மாலை மற்றும் இரவில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம். மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 55 கி.மீ., வேகத்திலும்; அவ்வப்போது 65 கி.மீ., வேகத்திலும் சூறாவளிக்காற்று வீசக்கூடும். தெற்கு, மத்திய மற்றும் அதை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகள், வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் மணிக்கு 45 கி.மீ., வேகத்திலும்; அவ்வப்போது 55 கி.மீ., வேகத்திலும் சூறாவளிக்காற்று வீசும் என்பதால், மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை