நாளை முதல் ரம்ஜான் நோன்பு
சென்னை: 'பிறை தென்படாததால், ரம்ஜான் நோன்பு நாளை முதல் துவங்கும்' என, தமிழக அரசின் தலைமை ஹாஜி சலாவுதீன் முகமது அயூப் அறிவித்துள்ளார்.அவரது அறிவிப்பு:ரம்ஜான் மாத பிறை சென்னையிலும், மற்ற மாவட்டங்களிலும் நேற்று காணப்படவில்லை. ஆகையால், 2ம் தேதி முதல் ரம்ஜான் மாத முதல் பிறை நிச்சயிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.