ராமேஸ்வரம் - தலைமன்னார் கப்பல் சேவை மத்திய அரசிடம் நிதி கேட்கிறது தமிழகம்
சென்னை:“இலங்கை தலைமன்னாருக்கு கப்பல் போக்கு வரத்தை துவங்க வசதியாக, ராமேஸ்வரம் துறைமுகத்தை மேம்படுத்த நிதி வழங்க வேண்டும்,” என, மத்திய அரசுக்கு அமைச்சர்எ.வ.வேலு வேண்டுகோள் விடுத்துள்ளார். நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கையில் உள்ள காங்கேசன்துறைக்கு பயணியர் கப்பல் போக்குவரத்தை, மத்திய அரசு துவக்கியுள்ளது. இதேபோல, ராமேஸ்வரத்தில் இருந்து தலைமன்னாருக்கு கப்பல் போக்குவரத்தை துவங்க, தமிழக அரசு விரும்புகிறது.ரூ.300 கோடி
இந்நிலையில், கடல்சார் துறையை மேம்படுத்துவதில், கடலோர மாநிலங்களின் பங்களிப்பு மற்றும் கூட்டு முயற்சியை வலுப்படுத்துவதற்கான கூட்டம், கோவாவில் நேற்று நடந்தது.இதில், மத்திய கப்பல்போக்குவரத்து துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால், கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் உள்ளிட்டோர்பங்கேற்றனர்.தமிழகத்தின் சார்பில் நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது:நாகப்பட்டினம் துறைமுக மேம்பாட்டுக்கு, மத்திய அரசு 10.4 கோடி ரூபாய் வழங்கியுள்ளது. இந்த நிதி, நாகப்பட்டினம் - காங்கேசன்துறை கப்பல் சேவையை சிறப்பாக அமைக்க உதவியுள்ளது. சாகர்மாலா திட்டத்தின் கீழ், நாகப்பட்டினம் துறைமுக விரிவாக்க பணிகளுக்கு, 300 கோடி ரூபாய் நிதியுதவி பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.இது, நடுத்தர சரக்கு மற்றும் பயணியர் கப்பல்களை கையாள்வதற்கும், இலங்கையுடன் வர்த்தகத்தை மேம்படுத்தவும் உதவும். ராமேஸ்வரம் - தலைமன்னார் கப்பல் போக்குவரத்து, ஒரு காலத்தில் இந்தியா - இலங்கைக்கு முக்கிய இணைப்பாக இருந்தது.அரங்கு தேவை
இந்த கப்பல் சேவையை மீண்டும் துவங்க, ராமேஸ்வரம் துறைமுகத்தில் உள்கட்டமைப்பை மேம்படுத்த, மத்திய அரசு நிதி வழங்க வேண்டும். ராமேஸ்வரம் தீவு ஆன்மிக ரீதியாக முக்கியத்துவம் பெற்றது. இங்கு ஆண்டு முழுதும் ஏராளமானபக்தர்கள், சுற்றுலா பயணி யர் வருவதை, மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.குஜராத் லோத்தலில் தேசிய கடல்சார் பாரம் பரிய அருங்காட்சியக வளாகம் உருவாக்கப்பட்டு வருகிறது. தமிழகம் வளமான கடல்சார் வரலாற்றை கொண்டுள்ளது. இந்த பாரம்பரியத்தை அங்கு காட்சிப்படுத்துவதில், நாங்கள் ஆர்வமாக உள்ளோம். அங்கு அரங்கை உருவாக்க, மத்திய அரசு நிதியுதவி வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.