உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு மறுப்பு சரியே

துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு மறுப்பு சரியே

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கடந்த, 1988க்கு பின் துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு, சிறப்பு நிலை ஊதியம் வழங்கும் வகையில், 2011ல் தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையின் பலன்களை தங்களுக்கும் வழங்கக்கோரி, 1995க்கு பின் துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்றவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.மேலும், இதுதொடர்பாக தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி, அந்த அரசாணை பலன்களை வழங்க உத்தரவிட்டார். ஆனால், 1988 ஜூன் முதல் 1995 டிசம்பர் வரை துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களாக பணிபுரியவில்லை என்று கூறி, அவர்களின் கோரிக்கையை அரசு நிராகரித்தது.இதை எதிர்த்து, 1995ம் ஆண்டு டிசம்பருக்கு பின் தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்று, தற்போது ஓய்வு பெற்றுள்ள ஆசிரியர்கள் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கை நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், கே.குமரேஷ் பாபு அடங்கிய அமர்வு விசாரித்தது.அப்போது, அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஆர்.நீலகண்டன் ஆஜராகி, ''2988 முதல் 1995 வரை பதவி உயர்வு பெற்றவர்களுக்கு மட்டுமே, இந்த அரசாணை பொருந்தும். இந்த காலவரம்பு இல்லாமல், துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பணப்பலன்கள் வழங்குவதாக இருந்தால், ஓய்வு பெற்ற துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் 11,239 பேருக்கு ஓய்வூதியம் வழங்கும் போது, அரசுக்கு 278 கோடி ரூபாய் வரை கூடுதல் செலவு ஏற்படும். இந்த வழக்கை பொறுத்தவரை, மேல்முறையீடுதாரர்கள் அனைவரும், 1995 டிசம்பருக்கு பின் பதவி உயர்வு பெற்று உள்ளனர். இதை கருத்தில் கொண்டே, மேல்முறையீடு தாரர்களின் கோரிக்கையை அரசு நிராகரித்துள்ளது,'' என்றார்.

இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

கடந்த 1995 டிசம்பருக்கு பின் துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்றவர்களுக்கு, ஊதிய உயர்வு வழங்க முடியாது என்று காலவரம்பு நிர்ணயிக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது.இந்த காலவரம்புக்கு பின் பதவி உயர்வு பெற்றவர்களுக்கு பணப்பலன்கள் பெற உரிமையில்லை. எனவே, 1995ம் ஆண்டுக்கு பின் பதவி உயர்வு பெற்றவர்களுக்கு பணப்பலன்கள் வழங்க மறுத்த அரசு உத்தரவு செல்லும். மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Bhaskaran
ஜூன் 23, 2024 13:00

செய்தித்தாள் கூட படிக்காத வாத்தியார்கள் கிராமப்புறங்களில் அதிகம் இவர்கள்தான் மாணவர்களை போட்டி தேர்வுகளில் கலந்துகொள்ள தயார் செய்கிறார்களாம் அட போங்கப்பா


ديفيد رافائيل
ஜூன் 23, 2024 07:32

சாராயம் குடிச்சு இறந்தவங்களுக்கு 10 lakh சரியா?


Sesh
ஜூன் 23, 2024 07:54

Correct only. Legal or illegal they are loyal to liquor so govt should backup.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை