உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரூ.70,000 லஞ்சம் சார் - பதிவாளர் புரோக்கர் கைது

ரூ.70,000 லஞ்சம் சார் - பதிவாளர் புரோக்கர் கைது

திருமங்கலம்: மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே கிழவனேரி ஆனந்தராஜூக்கு, 3.18 ஏக்கர் நிலத்தை செந்தில்குமார் என்பவருக்கு விற்றார். நிலத்தை பத்திரம் பதிய பிப்., 21ல் செந்தில்குமாரிடம், 70,000 ரூபாய் லஞ்சம் தருமாறு, திருமங்கலம் சார் - பதிவாளர் பாண்டியராஜன் கேட்டார்.செந்தில்குமார் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். நேற்று இந்த பணத்தை, திருமங்கலம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பாண்டியராஜனிடம் செந்தில்குமார் கொடுக்க முயன்றார்.பணத்தை புரோக்கர் பால மணிகண்டன் என்பவரிடம் கொடுக்கும்படி பாண்டியராஜன் தெரிவித்தார். பால மணிகண்டன் தன் வங்கிக் கணக்கில் பணத்தை செலுத்துமாறு கூறினார்.செந்தில்குமார் வங்கிக் கணக்கில் பணத்தை செலுத்தினார். பாலமணிகண்டனிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரித்தனர். அவரது வாக்குமூலத்தின்படி பாண்டியராஜனிடம் விசாரித்தனர். இருவரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை