உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மறுபிறவி கருத்துக்கள் ஏராளம்; மகா விஷ்ணு பேச்சுக்கு திருக்குறளே சாட்சி!

மறுபிறவி கருத்துக்கள் ஏராளம்; மகா விஷ்ணு பேச்சுக்கு திருக்குறளே சாட்சி!

சென்னை: சென்னையில் கைது செய்யப்பட்டுள்ள பேச்சாளர் மகா விஷ்ணு கூறிய மறுபிறவி கருத்துக்கள் திருக்குறளில் ஏராளம் உள்ளன.பரம்பொருள் அறக்கட்டளை நிறுவனரான மகா விஷ்ணு, சென்னை அசோக் நகர் பள்ளியில் மறுபிறவி, பாவம், புண்ணியம் பற்றி பேசியது சர்ச்சை ஆகியுள்ளது. மறுபிறவி என்பதே மூடநம்பிக்கை என்று வெவ்வேறு அரசியல் பிரமுகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.ஆனால், மறுபிறவி பற்றிய கருத்துக்கள், சங்க இலக்கியங்களில் நிறைய காணப்படுகின்றன. உலகம் முழுவதும் போற்றி புகழப்படும் திருக்குறளில் கூட, ஏராளமான குறட்பாக்கள் உள்ளன.பிறவிப்பெருங்கடல் நீந்துவர் நீந்தார்இறைவன் அடி சேராதார் (திருக்குறள் 10)பொருள்: இறைவனின் திருவடிகளை சேர்ந்தவர்களே பிறவி என்னும் பெருங்கடலை கடந்து செல்வர்; சேராதவர்கள் கடந்து செல்ல முடியாது.எழு பிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்பண்புடை மக்கட் பெறின் (திருக்குறள் 62)பொருள்: பழி இல்லாத நல்ல பண்புள்ள மக்களை ஒருவர் பெற்றால், அவரை ஏழு பிறப்பிலும் தீவினை பயன்கள் தீண்டாது.எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்விழுமந் துடைத்தவர் நட்பு (திருக்குறள் 107)பொருள்: தமக்கு ஒரு துன்பம் நேரும்போது உதவி செய்தவர்களின் நட்பை, சான்றோர் ஏழு பிறப்புகளிலும் நினைத்திருப்பர்ஒருமையுள் ஆமை போல ஐந்தடக்கலாற்றின்எழுமையும் ஏமாப் புடைத்து (திருக்குறள் 126)பொருள்: ஒரு பிறவியில் ஆமை போல் ஒருவன் ஐந்து புலன்களையும் அடக்கி வாழக் கற்றுக்கொண்டால், அது அவனுக்கு ஏழு பிறவிக்கும் பாதுகாப்பாக இருக்கும்ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவற்குஎழுமையும் ஏமாப் புடைத்து (குறள் 398)பொருள்: ஒரு பிறவியில் ஒருவர் கற்கும் கல்வி அறிவானது, அவரது ஏழு பிறவிகளிலும் அவருக்கு பாதுகாப்பாக இருக்கும்.புகழ்ந்தவை போற்றிச் செயல் வேண்டும் செய்யாதுஇகழ்ந்தார்க்கு எழுமையும் இல் (குறள் 538)பொருள்: முட்டாளான ஒருவர், ஏழு பிறவிகளில் அனுபவிக்க வேண்டிய துன்பத்தை ஒரே பிறவியில் அனுபவித்து விடுவார்.இது மட்டுமின்றி, இலக்கியங்கள் பலவற்றிலும் ஏழு பிறவிகள், மறுபிறவி என்பனவற்றை குறிப்பிடும் பாடல்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 121 )

Ashokan Subbarayan
அக் 09, 2024 14:20

எழு பிறவி என்றால் ஏழு பிறவி என்று பொருள் கொள்ளக்கூடாது. பிறவி யாருக்கும் ஏழுடன் நின்றுவிடுவதில்லை. ஆன்மாவிற்கு அழிவில்லை. ஒவ்வொரு உடலாக மாற்றி மாற்றிப் பிறக்கின்றது. அவ்வளவுதான். எழு பிறவி என்றால் பிறவி எழும்போதெல்லாம் என்று பொருள் கொள்க. சரியாக இருக்கும்


Natarajan Arunachalam
அக் 08, 2024 19:59

அருமை. உங்கள் எண்ணம் என்பது தொடக்கமான கர்மா. விதி என்பது முடிவு நிலை கர்மா. நாம் என்ன செய்கின்றோமோ அது தான் பிற்காலத்தில் தனக்கு வட்டியும் முதலும் சேர்த்து கிடைக்கும். நாம் எதை விதைக்கிறோமோ அது தானே பலனாக கிடைக்கும்.வாழ்க்கை பல ஏற்றத் தாழ்வுகளை கொடுத்து உள்ளது. நாம் செய்யும் கர்மா தான் முன்னின்று செயல் புரிகிறது.


N Annamalai
செப் 26, 2024 20:25

கருத்துக்களை தொகுத்து ஒரு கட்டுரை வெளியிடலாம் .ஆசிரியர் கவனத்திற்கு


Malarvizhi
செப் 16, 2024 15:00

திருக்குறள் வெறும் இலக்கண. இலக்கிய சுவைக்காக போதிக்கப்படவில்லை. காப்பியங்களில் இதைவிட அதிகமான அளவில் இலக்கண, இலக்கிய சுவை இருக்கும். திருக்குறள் ஒரு காப்பியமல்ல. அது ஒரு நீதி நெறி மற்றும் வாழ்க்கை நடைமுறை நூல். எவ்வாறு வாழவேண்டும் என்று விளக்கும் நூல். திருவள்ளுவருக்கு "பொய்யாமொழி புலவர்" என்ற ஒரு பட்டம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதாவது அவரது கருத்துக்கள் காலத்தாலும் பொய்ப்பிக்கப்படமாட்டா என்பதே.


Matt P
செப் 16, 2024 11:18

ஒருத்தர் நாலு கல்யாணம் பண்ணி மக்களின் தரத்தை உயர்த்திட்டா போச்சு ..


Matt P
செப் 16, 2024 10:08

உலகத்தில் வாழும் பல மனிதர்களின் சிந்தனையில், அவர்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லாமல் மத நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். இருந்தாலும் மறுபிறவி ஓன்று இருக்கலாம் என்ற சந்தேகம் இருக்கிறது. கடவுள் நம்பிக்கை இல்லாத கருணாநிதிக்கு கூட மறுபிறவி இருக்கலாம் என்ற சிந்தனை இருந்திருக்கிறது. இதை அவரே சொல்லியிருக்கிறார்.


Rasheel
செப் 13, 2024 14:05

மக்களை முட்டாளாக வைத்து இருந்தால் மட்டுமே அரசியல் தொழில் செய்ய முடியும். திருவள்ளுவர் ஈரோட்டுக்காரரின் கன்னட வழி வந்த தமிழ் தாத்தா என்பதே பகுத்தறிவு. இதை புரியாமல் எதையோ எழுதிக்கிட்டு..


Dharma
செப் 12, 2024 15:32

பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் தாமே வரும். இதுதான் கர்மா.


S Regurathi Pandian
செப் 12, 2024 15:20

இலக்கியங்கள் குறித்து புரிதல் இல்லாமல் அப்படி பேசுகின்றனர். கடவுள் நம்பிக்கை உள்ள இலக்கியங்களை பாதிக்கும்போது அவை உண்மை என்பதற்காகப் போதிக்கவில்லை. அவற்றின் இலக்கிய சுவைக்காக போதிக்கின்றோம். திருக்குறள் அதன் தனித்துவமான தமிழ் இலக்கிய நடையினால் போதிக்கப்படுகிறது. அதில் கூறும் அறங்களெல்லாம் எக்காலத்திற்கும் பொருந்தும் என்பதல்ல. திருவள்ளுவர் காலத்தில் இருந்த புரிதலில் அவர் இலக்கியம் படைத்துள்ளார். இரண்டே அடிகளில் இப்படிப்பட்ட இலக்கியத்தை படைத்துள்ளார். அதன் இலக்கண இலக்கிய சுவைக்காக அதுபோதிக்கப்படுகிறது. திருவள்ளுவர் அந்த கருத்துக்களை கூறினார் என்பதால் அவை எல்லாம் உண்மை என்றாகிவிடாது.


cpraghavvendran
செப் 14, 2024 08:38

நீர்தான்ய கருணாநிதி அவர்களின் உண்மையான வாரிசு. எதையும் உங்களுக்கு சாதகமாக மாற்றுவதில் கை தேர்ந்தவர்.


Matt P
செப் 16, 2024 11:24

திருவள்ளுவர் சொல்லிய கருத்துக்கள் உண்மை இல்லை என்றாகி விடாது என்பதற்காக எதிர்மறையாக வாழ்ந்து விட்டு போங்கள் உங்கள் வாழ்க்கை உங்க விருப்பம் ...வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்றாவது நம்புகிறீர்களா? தலைவர் கூட திருவள்ளுவரை வைச்சு வியாபாரம் தான் செய்தஆர். . வள்ளுவர் சொல்லியது எல்லாம் உண்மை என்ற்று நம்பியிருந்தால் வள்ளுவர் வழி வாழ்ந்திருப்பாரே.


N Annamalai
செப் 26, 2024 20:17

தவறான புரிதல் .அது எக்காலத்திற்கும் பொருந்தும் .நேற்றும் பொருந்தியது .இன்றும் பொருந்தும் .நாளை நிச்சயம் பொருத்தும் .


Dharmavaan
செப் 12, 2024 13:01

மெய் வருத்தும் அளவே கூலி தரும் கடவுள் அருள் இருந்தால் முழுதும் பலன் என்பதே


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை