உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டில்லி தமிழ்நாடு இல்லம் ரூ.257 கோடியில் சீரமைப்பு

டில்லி தமிழ்நாடு இல்லம் ரூ.257 கோடியில் சீரமைப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: டில்லி தமிழ்நாடு இல்லத்தில் 257 கோடி ரூபாயில் கட்டப்பட உள்ள கட்டடங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் நேற்று, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக அடிக்கல் நாட்டினார்.தமிழ்நாடு இல்லத்தை மறு சீரமைத்து, புதிய கட்டடங்கள் கட்ட, தமிழக அரசின் பொதுப்பணித் துறை, 257 கோடி ரூபாய் ஒதுக்கியது.கட்டடம் மூன்று அடித்தளங்கள், தரைதளம் மற்றும் ஏழு மேல் தளங்களை கொண்டதாக, கட்டப்பட உள்ளது. இக்கட்டடத்திற்கு முதல்வர் ஸ்டாலின் நேற்று தலைமை செயலகத்தில் இருந்து, 'வீடியோ கான்பரன்ஸ்' வழியே, அடிக்கல் நாட்டினார்.நெடுஞ்சாலை பாலங்கள் கட்டுமானத்திற்காக, தரப்படுத்தப்பட்ட வரைபடங்கள் அடங்கிய, 11 தொகுதிகள் கொண்ட புத்தகங்களை, முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்டார்.தமிழக அரசின் நெடுஞ்சாலைகள் துறை சார்பில், நெடுஞ்சாலை பாலங்கள் கட்டுமானத்திற்காக தரப்படுத்தப்பட்ட வரைபடங்கள் 11 தொகுதிகளாக தயாரிக்கப்பட்டுள்ளன.இவை புத்தகங்களாக அச்சிடப்பட்டுள்ளன. இத்தொகுப்புகள் வெளியீட்டால், பாலங்கள் வடிவமைப்பு மற்றும் வரைபடம் தயாரிப்பதற்கான நேரம் தவிர்க்கப்படும். மாநிலம் முழுதும் ஒரே மாதிரியான வழிமுறைகள் பின்பற்றப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ramakrishnan Sathyanarayanan
ஜூலை 27, 2024 09:04

பில்டிங் கான்ட்ராக்ட் கூடவே உற்பத்தி சார்ந்த தொழில்களையும் மாநிலத்தில் பரவலாக நடத்துங்க


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை