உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / குளித்தலை அருகே சாலை ஓரத்தில் பிறந்த ஆண் சிசு மீட்பு

குளித்தலை அருகே சாலை ஓரத்தில் பிறந்த ஆண் சிசு மீட்பு

குளித்தலை அருகே காவல்காரன் பட்டி சாலை ஓரத்தில் பிறந்த 30 நிமிடத்தில் ஆண் சிசு குழந்தை சத்தம் கேட்டு பொதுமக்கள் மீட்டு அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் ஒப்படைப்புகரூர் மாவட்டம் குளித்தலை அருகே உப்பு காட்சி பட்டி கிராமத்தில் சாலை ஓரத்தில் பிறந்த 30 நிமிடமான ஆண் சிசு குழந்தை அழுகை சத்தம் கேட்டு அவ்வழியாகச் சென்ற பொதுமக்கள் அந்த சிசு குழந்தையை மீட்டு காவல்காரன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒப்படைத்தனர்.பணியில் இருந்த மருத்துவர் ஆண் சிசு குழந்தைக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு குழந்தை சிசு பராமரிப்பு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பப்பட்டுள்ளது.கடந்த ஏப்ரல் மாதம் 26 ஆம் தேதி காவல்காரன் பட்டியில் குப்பையில் இறந்த நிலையில் ஆண் சிசு குழந்தை கிடப்பதை பொதுமக்கள் தகவல் கொடுத்த பேரில் கிராம நிர்வாக அலுவலர் கணேசன் தோகைமலை போலீசில் புகார் கொடுத்தார் புகாரின் பேரில் போலீசார் இறந்த நிலையில் இருந்த சிசு குழந்தையை கைப்பற்றி உடல் கூறு ஆய்வு செய்யப்பட்டு விசாரணை செய்து வந்தனர். என்பது குறிப்பிடத்தக்கது.இதுகுறித்து மாவட்ட சுகாதார பணி இணை இயக்குனர் சந்தோஷ் குமார் கூறியதாவது.காவல்காரன்பட்டி அருகிலுள்ள கிராமத்தில் பிறந்த 30 நிமிடத்திற்கு ஆண் சிசு குழந்தை கிடந்ததை பொதுமக்கள் மீட்டு காவல் காரம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒப்படைத்தனர் மருத்துவ முயற்சி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பப்பட்டுள்ளதுமேலும் இன்று காவல்காரன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் இன்று குழந்தைகள் ஏதும் பிறக்கவில்லை எனவும் கூறினார்மேலும் இதுகுறித்து தோகைமலை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை