உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஓய்வு பெற்ற ஆசிரியைக்கு சரமாரி கத்திக்குத்து; மயிலாடுதுறையில் வாலிபர் வெறிச்செயல்!

ஓய்வு பெற்ற ஆசிரியைக்கு சரமாரி கத்திக்குத்து; மயிலாடுதுறையில் வாலிபர் வெறிச்செயல்!

மயிலாடுதுறை: எதிரெதிர் வீட்டில் வசிப்பவர்களுக்குள் ஏற்பட்ட தகராறு காரணமாக மயிலாடுதுறையில், ஓய்வுபெற்ற ஆசிரியை நிர்மலாதேவி என்பவரை கத்தியால் சரமாரியாக குத்திய பிரேம் என்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.மயிலாடுதுறையை அடுத்த மதுரா நகர் டெலிகாம் நகர் 2வது கிராஸ் பகுதியில் மாதவன், 62, என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி நிர்மலா ,60, ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியர். இவர்களுக்கும் எதிர் வீட்டில் வசிக்கும் பிரேம் (24) என்ற பொறியியல் பட்டதாரி வாலிபர் குடும்பத்திற்கும் முன் விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் இன்று காலை வீட்டு வாசலில் கோலம் போட்ட நிர்மலாவை சிறிய கத்தியைக் கொண்டு பிரேம் 15க்கு மேற்பட்ட இடங்களில் குத்தியுள்ளார். தடுக்க வந்த சேது மாதவனையும் பிரேம் கத்தியால் குத்தி உள்ளான்.படுகாயம் அடைந்த சேது மாதவன் மற்றும் அவரது மனைவி நிர்மலா இருவரும் தஞ்சை அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இது தொடர்பாக வாலிபர் பிரேமை மயிலாடுதுறை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

தர்மராஜ் தங்கரத்தினம்
மார் 06, 2025 17:50

தமிழகத்தில் அன்றாடம் நடக்கும் கொலைகள் அதிர்ச்சி அளிக்கின்றன .... பெரம்பலூா் மாவட்டம், தனியாா் பொறியியல் கல்லூரியில் 4-ஆம் ஆண்டு படித்து வந்த அப்துல் ஹபீஸ் 22 என்பவரை கடந்த சில ஆண்டுகளாக அல்பியா காதலித்து வந்துள்ளார். ஆன்லைனில் உருவான நட்பு காதலாக மாறியுள்ளது. திருமணம் செய்துகொள்வதாக உறுதி அளித்த ஹபீஸ் லோகநாயகியுடன் உறவில் இருந்துள்ளார். இந்த நிலையில், அப்துல் ஹபீஸை திருமணம் செய்துகொள்வதற்காக இஸ்லாமிய மதத்துக்கு மாறிய லோகநாயகி தனது பெயரை அல்பியாவாக மாற்றிக் கொண்டுள்ளார். இதனிடையே, சென்னை ஆவடியைச் சேர்ந்த ஐடி ஊழியர் தாவியா சுல்தானா 22 மற்றும் திருச்சி துறையூரைச் சேர்ந்த செவிலியர் மாணவி மோனிஷா 21 என்பருடன் அப்துல் ஹபீஸ் பழகி வந்துள்ளாா். இவர்கள் இருவருடன் நெருக்கம் ஏற்பட அல்பியாவை தவிர்த்துள்ளார் ஹபீஸ். கடந்த வாரம் தன்னை காயப்படுத்திக் கொண்ட அல்பியா, திருமணம் செய்துகொள்ளவில்லை என்றால் தற்கொலை செய்துவிடுவேன் என்று அப்துல் ஹபீஸை மிரட்டியுள்ளார். இதையடுத்து, அல்பியாவை கொலை செய்ய மற்ற இரண்டு பெண் தோழிகளான தாவியா மற்றும் மோனிஷாவுடன் இணைந்து அப்துல் ஹபீஸ் சதித்திட்டம் தீட்டியுள்ளார். அதன்படி, கடந்த மாா்ச் 1ஆம் தேதி மூவருடன் அவா் ஏற்காடு வந்துள்ளாா். அல்பியாவின் காயத்துக்கு வலிநிவாரணி செலுத்துவதாக கூறி, விஷ ஊசியை மோனிஷா மூலம் செலுத்தியுள்ளார். அல்பியா மயக்கமடைந்தவுடன் அவரை தூக்கி 60 அடி பள்ளத்தாக்கில் மூவரும் வீசிவிட்டுச் சென்றுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து ஏற்காடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அப்துல் ஹபீஸ், தாவியா சுல்தானா, மோனிஷா ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆன்லைனில் ஏற்பட்ட நட்பு, காதலாக மாறி கொடூர கொலையில் முடிந்துள்ளது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஸ்ரீனிவாசன் ராமஸ்வாமி
மார் 06, 2025 15:56

போதை மற்றும் பொறுப்பில்லா தலைமுறையை உருவாக்கிய பெருமை முழுக்க திராவிட மாடலுக்கு மட்டுமே சொந்தம்.


saiprakash
மார் 06, 2025 16:55

up ல போயி பாரு ,தமிழ் நாட்டைவிட ஓயின்ஷொப் அதிகம் ,இந்த பிஜேபி அரசாங்கம் வந்தபின்னர்தான் போதைப்பொருள் அதிகளவில் பயன்பட்டில் இருக்கு, குஜராத்தின் துறைமுகங்கள் வழியாகத்தான் நாட்டுக்குள்ள வருது,


Raj
மார் 06, 2025 13:36

வேலையில்லா திண்டாட்டத்தினால் இளைஞர்கள் எல்லாம் மனநோயாளியாக மாறிவருகின்றனர்.


புதிய வீடியோ