உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அமைச்சரை வரவேற்க ரோடு சீரமைப்பு: தடுத்து நிறுத்திய காங்., - எம்.எல்.ஏ.,

அமைச்சரை வரவேற்க ரோடு சீரமைப்பு: தடுத்து நிறுத்திய காங்., - எம்.எல்.ஏ.,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் வேலு நேற்று சுற்றுப்பயணம் செய்து வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்தார்.மார்த்தாண்டம் பகுதியில் மிக மோசமாக சேதம் அடைந்திருந்த சாலைகளை நேற்று முன்தினம் இரவில் தற்காலிகமாக சீரமைக்க ஊழியர்கள் முயன்றனர். இதையறிந்த காங்., - எம்.எல்.ஏ., தாரகை கத்பர்ட் அங்கு சென்று அப்பணிகளை தடுத்து நிறுத்தினார்.அவர், 'அமைச்சர் வந்து சேதமடைந்த சாலைகளை பார்த்த பின் உரிய முறையில் சீரமைத்தால் போதும். அமைச்சருக்கு சேதம் அடைந்தது தெரியாமல் இருக்க, நீங்கள் இப்போது வேலை செய்ய வேண்டிய தேவை இல்லை. அவர் சேதத்தை பார்க்க வேண்டும்' என்றார்.எம்.எல்.ஏ., தன் முடிவில் உறுதியாக இருந்ததால் சீரமைப்பு பணி கைவிடப்பட்டது. இதையடுத்து, நேற்று காலையில் அந்த வழியே வந்த அமைச்சர் வேலு, சேதமடைந்த சாலைகளை பார்வையிட்டார்.பின், அவர் கூறியதாவது:களியக்காவிளை - நாகர்கோவில் இடையே 56 கி.மீ., துார சாலை, களியக்காவிளையிலிருந்து 12 கி.மீ.,க்கு மிகவும் மோசமாக சேதமடைந்துள்ளது. அந்த பகுதி உடனே சீரமைக்கப்படும்.மார்த்தாண்டம் மேம்பால அணுகு சாலைகள், மிகவும் குறுகலாக வாகனங்கள் ஒழுங்காக செல்ல முடியாத நிலையில் உள்ளன. அவற்றை அகலப்படுத்த கலெக்டர் வாயிலாக நிலம் கையகப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.பின், கன்னியாகுமரியில் விவேகானந்தர் மண்டபம் - திருவள்ளுவர் சிலை இடையே அமைக்கப்படும் கண்ணாடி இழை கூண்டு பால பணிகளை ஆய்வு செய்த அமைச்சர், 'அப்பணி டிசம்பரில் முடியும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

ramani
செப் 06, 2024 17:43

நாடகம் மிக சரியாக நடத்த பட்டது


karunamoorthi Karuna
செப் 05, 2024 08:05

இது ஒரு நாடகம்


எஸ் எஸ்
செப் 05, 2024 08:05

அருமை. இதே போல் அங்கு நடக்கும் கனிம வள கொள்ளையும் தடுக்கப்பட வேண்டும்


Kasimani Baskaran
செப் 05, 2024 05:29

விட்டால் முதல்வரை அங்கு சைக்கிளில் பயணம் செய்ய வைத்து இருப்பார் போலவே... விரைவில் இவர் கையகப்படுத்தப்பட்ட விடுவார்.


Mani . V
செப் 05, 2024 04:42

அரசு எந்திரம் மக்களுக்காக செயல்படுவதில்லை. ஊழல் அரசியல்வாதிகளுக்காகத்தான் செயல்படுகிறது.


அஸ்வின்
செப் 05, 2024 03:40

எல்லா சட்டமன்ற உறுப்பினரும் இவ்வாறு செயல்படனும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை