உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வாகனங்களில் போலீஸ் ஸ்டிக்கர் 421 பேருக்கு ரூ.500 அபராதம்

வாகனங்களில் போலீஸ் ஸ்டிக்கர் 421 பேருக்கு ரூ.500 அபராதம்

சென்னை:விதிகளை மீறி வாகன பதிவு எண் தகட்டில், 'போலீஸ்' என, 'ஸ்டிக்கர்' ஒட்டியிருந்த, 421 வாகன ஓட்டிகளுக்கு, தலா 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.சமூக விரோதிகள், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் என, சட்ட விரோத செயலில் ஈடுபடுவோர், வாகனங்களில் போலீஸ், ஊடகம், தலைமை செயலகம், டி.என்.இ.பி., என, 'ஸ்டிக்கர்' ஒட்டி தப்பித்து விடுவதாக கூறப்படுகிறது.இதனால், இதுபோன்ற ஸ்டிக்கர் ஒட்டியுள்ள வாகனங்களையும் சோதனை செய்ய, போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் முதற்கட்டமாக, வாகன பதிவு எண் தகட்டில் போலீஸ் என, 'ஸ்டிக்கர்' ஒட்டப்பட்ட வாகனங்களை மடக்கி சோதனை செய்தனர். சென்னை முழுதும் நேற்று, 64 இடங்களில் நடத்தப்பட்ட இந்த சோதனையில், 421 வாகன ஓட்டிகள் சிக்கினர்.அவர்களுக்கு தலா, 500 ரூபாய் அபராதம் விதித்தனர். போலீஸ் என ஒட்டப்பட்டு இருந்த ஸ்டிக்கரும் அகற்றப்பட்டது. இந்த வாகன ஓட்டிகள், அடுத்த முறையும் விதிகளை மீறி ஸ்டிக்கர் ஒட்டி இருந்தால், 1,500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். தற்போது பிடிபட்டவர்கள் மட்டுமின்றி, வேறு யாராக இருந்தாலும், வாகன பதிவு எண் தகட்டில், தேவையற்ற எந்த ஸ்டிக்கரையும் ஒட்டக்கூடாது. அந்த தகட்டில், பதிவு எண்கள் மட்டுமே இருக்க வேண்டும் என, போலீசார் எச்சரித்துள்ளனர்.இதில் வேளச்சேரி, மடிப்பாக்கம், ஆலந்துார் பகுதியில் போக்குவரத்து போலீசார் நடத்திய சோதனையில், 'ஸ்டிக்கர்' ஒட்டிய, 23 பேரிடம் தலா, 500 ரூபாய் வீதம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், ஸ்டிக்கரும் அகற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Mohan das GANDHI
மே 03, 2024 13:41

IN FRANCE SUCH PEOPLE DOING MISUSE PUNISHABLE HEAVY FINE AND ALOS JAIL IS CONSIDERED THESE LAW SHOULD ALSO IN INDIA SHOULD BE IMPLIMENT AS SOON AS POSSIBLE TO REDUCE CRIMES GOVERNMENT LAW AND ORDER SHOULD BE RESPECTED BY PUBLIC


Mohan das GANDHI
மே 03, 2024 13:34

இதுபோன்ற கேடுவிளைவிக்கும் முட்டாள்களின் வாகனங்களை அரசு RTOஅல்லது போலீஸ் அதிகாரிகள் ஏலத்தில் விட்டு அரசுக்கு சொந்தமான பப்ளிக் கஜானாவில் கொண்டு சேர்க்க வேண்டும் ஏலத்தில் விடும் வாகனங்களின் பணத்தை சட்டம் மிக கடுமையானால் தான் இந்த திருடர்கள் இப்படி கேவலமான ஸ்டிக்கர் ஓட்டும் வேலைகளை செய்ய மாட்டார்கள் ? திமுககாரர்கள் ஏற்கனவே மத்திய அரசு செய்யும் திட்டங்களில் ஸ்டிக்கர் ஒட்டி தான் செய்ததாக செய்வதே பெரும் குற்றமே ?? ? ? ஸ்டாலின் கஞ்சா சாராய திமுக அரசு தான் இதெற்கெல்லாம் காரணம்


ellar
மே 03, 2024 13:20

மிகவும் நல்ல வரவேற்க தகுந்த செயல்பாடு


jayvee
மே 03, 2024 11:50

சட்டக்கல்லாரியில் படிக்கும் மாணவர்கள் கூட வழக்கறிஞர் ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்ளும் அவலம் அதை நீதிமன்றங்களும் பார் கொன்சில்களும் கண்டும் காணாத அவலம்


jayvee
மே 03, 2024 11:49

ஆட்டோ மற்றும் டாக்ஸிகளில் ஒட்டப்பட்டிருக்கும் அட்வொகேட் ஸ்டிக்கர்களை என்ன தண்டனை ? தண்டனை கொடுக்கப்படுமா ? மருத்துவர்களுக்கு அனுமதி கொடுத்தால் ஒரு ஞாயம் உள்ளது அவர்களை இனம் கண்டு உதவிக்கு அழைக்கலாம் அட்வொகடுகளுக்கு எதற்கு போலீஸ் பார்த்து பயப்படவா ?


சின்னமணி பாலன்
மே 03, 2024 11:37

நான் சமீபத்தில் பார்த்த ஒரு வாகனத்தில் 8055 என்ற எண் BOSS என்று இருக்கும் வகையில் நம்பர் பிளேட் வடிவமைக்கப்பட்டு இருந்தது.


V RAMASWAMY
மே 03, 2024 08:07

காவலர்களுக்கு வேட்டையோ வேட்டை


R.RAMACHANDRAN
மே 03, 2024 07:27

அரசாங்க ஊழியராக பணியில் சேருவார்கள் வழக்கறிஞ்சர்கள் போன்றோர் ஸ்ட்ரிக்கர் ஒட்டுவது என்பது அவர்கள் புரியும் குற்றத்திற்கு அவர்களை தொடக் கூடாது என்பதற்காகவே


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை