உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மணல் கடத்தலை தடுக்க முடியும்!

மணல் கடத்தலை தடுக்க முடியும்!

“தமிழகத்தில் இருந்த 17க்கும் மேற்பட்ட மணல் குவாரிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் கட்டுமானப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், 30 லட்சம் கட்டட தொழிலாளர்களும், மணல் லாரி தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, மணல் குவாரிகளை திறக்க வேண்டும். மேலும், இடைத்தரகர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் மணல் கடத்துவதை தடுக்கும் வகையில், அந்தந்த ஆற்றுப்படுகையில் உள்ள கிராம ஊராட்சி மக்களின் முன்னிலையில், விவசாய டிராக்டர்களில் மணலை அள்ளி, கரையில் சேர்க்க வேண்டும்.இதனால், அதிக ஆழத்திற்கு மணல் எடுப்பது மற்றும் மணல் கடத்துவது தடுக்கப்படும்; விவசாயமும், நிலத்தடி நீர்மட்டமும் காக்கப்படும். இதுகுறித்து, நீர்வளத்துறை முதன்மை பொறியாளரிடம் வலியுறுத்தி உள்ளோம்; முதல்வருக்கும் கடிதம் அனுப்பி உள்ளோம்.- எஸ்.யுவராஜ்,தலைவர், அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

S. Neelakanta Pillai
ஜூன் 12, 2024 20:58

நல்ல யோசனை தான். எப்போதுமே மக்களையும் கொள்ளையில் ஈடுபடுத்தி விட்டால் எதிர் கேள்வியே வர வாய்ப்பில்லை. அப்படி என்றால் நிர்வாகம் என்று சொல்லிக்கொண்டு நெடுக்குடன் செருக்குடன் அலைந்து திரியும் அதிகாரிகள் எதற்கு?


மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ