உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருச்சியில் தபால் ஓட்டுகள் சங்கமம்: சத்யபிரதா சாஹு

திருச்சியில் தபால் ஓட்டுகள் சங்கமம்: சத்யபிரதா சாஹு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : ''தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் அளிக்கும் தபால் ஓட்டுகளை, திருச்சி மையத்திற்கு கொண்டு சென்று, அங்கிருந்து சம்பந்தப்பட்ட தொகுதிகளுக்கு பிரித்து அனுப்ப தேர்தல் கமிஷன் அனுமதி வழங்கியுள்ளது,'' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்தார்.

அவர் கூறியதாவது:

கடந்த தேர்தலில் தேர்தல் பணியில் ஈடுபட்டவர்கள், தபால் ஓட்டுகளை தபாலிலும் அனுப்ப முடியும். இம்முறை தபாலில் அனுப்ப தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, தேர்தல் பணியில் ஈடுபடுவோரின் தபால் ஓட்டுகளை, ஒவ்வொரு தொகுதியிலிருந்தும், அவர்கள் ஓட்டளிக்கும் தொகுதிக்கு எடுத்து செல்வது சிரமம் ஏற்படும்.இதைத் தவிர்க்க, ஒவ்வொரு மாவட்டத்திலும், தேர்தல் பயிற்சி கடைசி நாளான 17ம் தேதி, வெளியூரில் ஓட்டு உள்ளவர்களிடம் தபால் ஓட்டு பெறப்படும். தேர்தல் நடக்கும் 39 லோக்சபா தொகுதிகளுக்கும், விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும், பயிற்சி மையங்களில் ஓட்டு பெட்டிகள் வைத்து, தபால் ஓட்டு பெறப்படும்.வெளி தொகுதிகளுக்கு அனுப்ப வேண்டிய தபால் ஓட்டுகள், திருச்சிக்கு எடுத்து செல்லப்படும். அங்கு, அனைத்து தொகுதியிலிருந்தும் அலுவலர்கள் வருவர்.அவர்கள் தாங்கள் கொண்டு வந்த பிற தொகுதி ஓட்டுகளை, சம்பந்தப்பட்ட மாவட்ட அலுவலர்களிடம் ஒப்படைத்து விட்டு, தங்கள் மாவட்டத்துக்குரிய தபால் ஓட்டுகளை, பிற மாவட்ட அலுவலர்கள் தந்தால் பெற்றுக் கொண்டு ஊர் திரும்புவர். அவர்கள் கொண்டு வரும் தபால் ஓட்டுகள், மாவட்ட தேர்தல் அலுவலர் கட்டுப்பாட்டில் உள்ள ஓட்டு பெட்டியில் போடப்படும். ஓட்டு எண்ணிக்கை அன்று அவை எண்ணப்படும். உதாரணமாக, மத்திய சென்னை தொகுதியில், தேர்தல் பணியில் உள்ள அலுவலருக்கு, வடசென்னையில் ஓட்டு இருந்தாலும், அவர் தன் தபால் ஓட்டை, அந்த தொகுதி மாவட்ட தேர்தல் அலுவலரிடம் வழங்க முடியாது. அவர் பணிபுரியும் தொகுதியில், தபால் ஓட்டுகளை பெறும் அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும். அந்த ஓட்டு திருச்சிக்கு எடுத்து செல்லப்பட்டு, மத்திய சென்னை அலுவலரிடம் ஒப்படைக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ