உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விருதுநகர் மாரியம்மன் கோயிலில் சரத்குமார் அங்க பிரதட்சணம்

விருதுநகர் மாரியம்மன் கோயிலில் சரத்குமார் அங்க பிரதட்சணம்

ஸ்ரீவில்லிபுத்தூர்: மீண்டும் பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்க வேண்டும் என்றும், ராதிகா தேர்தலில் வெற்றி பெற வேண்டியும் விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயிலில் நடிகர் சரத்குமாார் நேற்று முன்தினம் இரவு அங்கப் பிரதட்சணம் செய்தார். பின் இருவரும் சுவாமி தரிசனம் செய்தனர்.நேற்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் மனைவி ராதிகா, அவரது மகன் ராகுலுடன் சுவாமி தரிசனம் செய்தார். ஆண்டாள் சன்னதியில் இருவரும் அர்ச்சனை செய்து தேர்தல் வெற்றிக்காக பிரார்த்தித்தனர். பின்னர் மணவாள மாமுனிகள் சன்னதியில் சடகோப ராமானுஜர் ஜீயரிடம் ஆசிர்வாதம் பெற்றனர். பின்னர் சரத்குமார் செய்தியாளரிடம் கூறியதாவது: லோக்சபா தேர்தலில் பாரதிய ஜனதா வெற்றி பெற்று மோடி பிரதமராக தொடர்வார். பா.ஜ., கூட்டணி அனைத்து மாநிலங்களும் மிகப் பெரும் வெற்றி பெறும். தமிழகத்திலும் எங்கள் வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள். இதற்காக ஆண்டாளிடம் பிரார்த்தனை செய்துள்ளோம் என்றார். ராதிகா கூறியதாவது: தேர்தல் வெற்றிக்காக ஆண்டாளிடம் பிரார்த்தனை செய்துள்ளோம். மக்கள் தீர்ப்பே, மகேசன் தீர்ப்பு என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்