மேலும் செய்திகள்
வாக்காளர் திருத்தம் முறையாக நடக்கவில்லை!
8 hour(s) ago | 15
1 கோடி பேர் கையெழுத்து தமிழக காங்., பெருமிதம்
8 hour(s) ago | 3
துரோகிகள் இருக்கும் வரை ராமதாசுடன் சேர மாட்டேன்: அன்புமணி
8 hour(s) ago | 1
சென்னை:பள்ளி இறுதி தேர்வுகளை, ஏப்.,12க்குள் முடித்து, ஏப்.,13 முதல் கோடை விடுமுறை விடப்படும் என, பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு, பொதுத்தேர்வு நடந்து வருகிறது. வரும் 26ம் தேதி, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு துவங்குகிறது. 9ம் வகுப்பு வரையிலான ஆண்டு இறுதி தேர்வு குறித்து, பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவொளி, தொடக்கக் கல்வி இயக்குனர் கண்ணப்பன் ஆகியோர் வெளியிட்ட அறிவிப்பு:லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளதால், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில், ஒன்று முதல் 9 வரையிலான மாணவர்களுக்கு, ஏப்.,2 முதல், 12 வரை பள்ளி இறுதி தேர்வுகள் நடத்தப்படும். ஏப்.,13 முதல் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்படும். ஆசிரியர்கள் தேர்தல் சார்ந்த பயிற்சி மற்றும் பணிகளில் பங்கேற்க வேண்டும்.அதேநேரம், ஏப்., 23 முதல், 26 வரையில், மாணவர்களின் விடைத்தாள் திருத்தம், தேர்வு முடிவு வெளியிடுவது மற்றும் அடுத்த கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை பணிகளை மேற்கொள்ள வேண்டும். ஏப்.,26 இந்த கல்வி ஆண்டின் கடைசி வேலைநாள். கோடை விடுமுறை முடிந்து, பள்ளி திறக்கும் நாள், பின்னர் அறிவிக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
8 hour(s) ago | 15
8 hour(s) ago | 3
8 hour(s) ago | 1