உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 81 சட்டசபை தொகுதிகளில் பா.ஜ.,வுக்கு இரண்டாமிடம்

81 சட்டசபை தொகுதிகளில் பா.ஜ.,வுக்கு இரண்டாமிடம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில், 81 சட்டசபை தொகுதிகளில், பா.ஜ., கூட்டணி இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. மூன்று தொகுதிகளில் முதலிடத்தை பிடித்துள்ளது. அ.தி.மு.க., கூட்டணி, 10 சட்டசபை தொகுதிகளில் மட்டுமே முதலிடத்தை பிடித்துள்ளது.லோக்சபா தேர்தலில், தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளையும், தி.மு.க., கூட்டணி கைப்பற்றி உள்ளது. ஆனாலும், கடந்த தேர்தலை விட, ஓட்டு சதவீதம் குறைந்துள்ளது. அதேபோல, அ.தி.மு.க.,வும் கடும் சரிவை கண்டுள்ளது. 39 லோக்சபா தொகுதிகளுக்கு உட்பட்ட, 234 சட்டசபை தொகுதிகளில், 10 தொகுதிகளில் மட்டுமே, அ.தி.மு.க., முதலிடம் பிடித்துள்ளது.திருக்கோவிலுார், உளுந்துார்பேட்டை, எடப்பாடி, சங்ககிரி, பரமத்திவேலுார், குமாரபாளையம், அரியலுார், ஜெயங்கொண்டம், திருமங்கலம், விருதுநகர் தொகுதிகளில், அ.தி.மு.க., முதலிடத்தை பிடித்துள்ளது. தர்மபுரி மாவட்டம், பென்னாகரம், தர்மபுரி, பாப்பிரெட்டிபட்டி தொகுதிகளில், பா.ஜ., கூட்டணியில் இடம் பெற்ற பா.ம.க., முதலிடம் பிடித்துள்ளது.மொத்தம், 234 சட்டசபை தொகுதிகளில், இதுவரை இல்லாத வகையில், 81 சட்டசபை தொகுதிகளில், அ.தி.மு.க.,வை பின்னுக்கு தள்ளி, பா.ஜ., கூட்டணி இரண்டாம் இடம் பிடித்துள்ளது. தென்மாவட்டங்களில், சில சட்டசபை தொகுதிகளில், அ.தி.மு.க., நான்காம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அத்தொகுதிகளில், நாம் தமிழர் கட்சி மூன்றாம் இடம் பிடித்துள்ளது. மூன்றில் ஒரு பங்கு சட்டசபை தொகுதிகளில், மூன்றாம் இடத்திற்கு அ.தி.மு.க., தள்ளப்பட்டு இருப்பதால், அக்கட்சியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

ராது
ஜூன் 09, 2024 11:18

கூட்டு களவாணி கூட்டில் முதன்மை ஆனால் கூட்டில்லாமல் காசுக்காக கூடாத கூட்டம் காசு வாங்கமா வோட்டு வாங்கின பாஜக கமலாலயம்


Alagusundram KULASEKARAN
ஜூன் 08, 2024 17:18

சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்


theruvasagan
ஜூன் 08, 2024 11:01

கேரளாவில் கால்பதித்தாகி விட்டது. தமிழ்நாட்டில் வாக்கு சதவிகிதம் உயர்வு. ஆந்திராவிலும் கணக்கை ஆரம்பித்தாகிவிட்டது. தெலங்கனாவிலும் கர்நாடகாவிலும் ஆளுங்கட்சிக்கு சரிசமமாக போட்டி. ஒரிசாவில் 25 வருட ஆளும் கட்சியை பின்னுக்குத்தள்ளி அமோகமாக வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் நிலைக்கு வந்தாகிவிட்டது. இத்தனைக்கும் அங்கு ஆளும் கட்சி மேல் பெரிதாக அதிருப்தி கூட இல்லை. தென்னிந்தியாவிலும் செல்வாக்கான கட்சிகளுக்கு சவால் விடும் அளவுக்கு வளர்ச்சி அடைந்துள்ளது என்பதற்கு இதைவிட வேறு என்ன ஆதாரம் வேணடும்.


P.Sekaran
ஜூன் 08, 2024 10:49

தமிழகத்தில் அண்ணாமலை தலைவராக தொடர்ந்தால் 26-ல் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும் அதில் எந்த சந்தேகமும் இல்லை. இப்பொழுது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்பது நடப்பு தரவுகளை பார்த்தாலே தெரிகிறது இதில் மூடிமறைக்க ஏதும் இல்லை . அரசுக்கு வேண்டியது நேர்மை. அதை மறைக்க கூடாது. அதைதான் செய்கிறது ஆளும் அரசு


Sampath Kumar
ஜூன் 08, 2024 10:17

127 இடங்களில் நாம் தமிழர் இரண்டாம் இடம் முதல இதை புரிஞ்சுக்கோங்க..... டெபாசிட் அவுட் கேஸ் எல்லாம் இப்படி சாக்கு போக்கு தேடி கொள்ள வேண்டியது தான்!


theruvasagan
ஜூன் 08, 2024 10:42

நோட்டாவை தாண்டாத கட்சி என்று கேலி பேசினவர்கள் இப்போது பாஜக இரண்டாம் இடத்தில் வந்தது இன்னொரு கட்சிக்கு அடுத்தபடிதான் என்று நொண்டிச் சமாதானம் சொல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள் என்பதே நல்ல முன்னேற்றம்தான்.


RAMAKRISHNAN NATESAN
ஜூன் 08, 2024 13:59

வாக்கு சதவிகிதத்தைக் குறிப்பிட்டுதான் .. "பாஜக ஒரு ஈட்டோ அதிக சீட்டோ பெற்றால் கட்சியைக் கலைத்துவிடுகிறேன் என்று சொல்லவில்லை ...


Ra ja
ஜூன் 08, 2024 09:42

இயந்திரத்தின் மகிமையோ மகிமை . மக்களின் மனதை திசை திருப்பும் முயற்சி .


S.Govindarajan.
ஜூன் 08, 2024 10:01

உங்கள் எண்ணமே வாழ்வு


Gokul Krishnan
ஜூன் 08, 2024 12:16

ஆமாம் இயந்திரத்தின் மகிமையை வயநாடு ரே பரேலி அமேதி தூத்துக்குடியில் ஒத்துக் கொண்டால் நான் உங்கள் கருத்தை ஒத்துக் கொள்கிறேன்


Gokul Krishnan
ஜூன் 08, 2024 12:16

ஆமாம் இயந்திரத்தின் மகிமையை வயநாடு ரே பரேலி அமேதி தூத்துக்குடியில் ஒத்துக் கொண்டால் நான் உங்கள் கருத்தை ஒத்துக் கொள்கிறேன்


RAMAKRISHNAN NATESAN
ஜூன் 08, 2024 17:18

இயந்திரத்தின் மகிமையோ மகிமை . மக்களின் மனதை திசை திருப்பும் முயற்சி . பச்சைகளுக்கு மட்டுமே இப்படி ஒரு குணம் ...


veeramani
ஜூன் 08, 2024 09:42

தென் தமிழகத்தில் மக்கள் ஒரு மாற்றத்தை எதிர்பார்த்து இருக்கின்றனர் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, தேனீ, திண்டுக்கல் மதுரை ஆகிய பத்து தொகுதிகளிலும் எப்பொழுதும் இரட்டைஇலை வாக்குகள் அதிகமாம். இவர்கள் எம் ஜி ஆர் காலத்திலிருந்து இரட்டை இலைக்கு வாக்களிப்பவர்கள். அன்றைய எம் ஜி ஆர் காலத்து தொண்டர்களுக்கு மதிப்பேயில்லை. தற்போது உள்ள இரட்டை இலை காரர்கள் ஜெயலலிதா ஆட்கள். எனவே தென் திலகம் முழுவதும் தாமரை கட்சியின் செயல்பாடுகளை பார்த்தது அந்த கட்சிக்கே வாக்குகள் போட்டனர். இன்னும் சொல்லப்போனால் விஜயகாந்த் அனுதாப அலை விருதுநகரில் இருந்தது வரும் சட்டசபை தாமரை பங்களிப்பு இல்லாமல் இருக்க முடியாது


Oviya Vijay
ஜூன் 08, 2024 09:38

இப்படியெல்லாம் சப்பைக்கட்டு கட்டுவதன் மூலம் அண்ணாமலையை உயர்த்திக் காட்டி விடலாம் என முயற்சிக்க வேண்டாம்... அவரது தகுதிக்கேற்ற முடிவு என்னவோ அது தேர்தலின் இறுதி முடிவாக வெளியாகி விட்டது... அவ்வளவே... இரண்டாம் மூன்றாம் ரேங்க் எடுத்தவர்களை இவ்வுலகம் கண்டு கொள்ளாது... வெற்றி பெற்றவர்கள் மட்டுமே இங்கு கவனத்தில் கொள்ளப் படுவார்கள்... இவர் இனிமேலாவது வெற்றி பெறலாம் என்று நினைக்கவே சட்டப் பேரவை தேர்தல் எனில் இன்னும் இரண்டு வருடமோ இல்லையெனில் நாடாளுமன்ற தேர்தல் எனில் இன்னும் ஐந்து வருடமோ காத்திருக்க வேண்டும்... அதற்குள் இவர் கட்சியில் எந்த பதவியில் இருப்பார் என்றே யாருக்கும் தெரியாது...


Gokul Krishnan
ஜூன் 08, 2024 12:21

பத்து வருடங்கள் ஆட்சியில் இல்லாமல் இருந்த தி மு க காத்து இருக்க வில்லையா அது போல் இதுவும்


Barakat Ali
ஜூன் 08, 2024 09:09

ஒரு வேடிக்கை என்னவென்றால் பாஜக தமிழகத்தின் உள்ளே வந்து விடக்கூடாது என்று பதறிய கட்சிதான் 1999 இல் தானாக முன்வந்து வாஜ்பாயி அரசுக்கு ஆதரவு தெரிவித்தது ...


Kasimani Baskaran
ஜூன் 08, 2024 09:09

பாஜகவில் உள்ளடி வேலை பார்ப்பவர்கள் அதிகம். அதனால்த்தான் தீம்கா பாஜக பற்றி அதிகமாக கவலைப்படுகிறது. தீம்கா ஆதரவு பாஜகவினருக்கு பட்டுக்கம்பள வரவேற்பு இருக்கும் -அண்ணாமலை திராவிட ஒழிப்புக்கு அவசியமானவர்.


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி