உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தேவிபட்டினத்தில் கடல் அட்டை 24 கிலோ பறிமுதல் : கைது 1

தேவிபட்டினத்தில் கடல் அட்டை 24 கிலோ பறிமுதல் : கைது 1

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினத்தில் கடற்கரைப்பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 24 கிலோ கடல் அட்டைகளை பறிமுதல் செய்து அப்பகுதியைச் சேர்ந்த சீனி மைதீனை 40, வனத்துறையினர் கைது செய்தனர்.மன்னார் வளைகுடா கடல் பகுதியில் அரியவகை கடல் அட்டைகள் அதிகம் வாழ்கின்றன. இவற்றை பிடிக்க தடையுள்ள போதும் சிலர் மருத்துவ குணம் உள்ளதாக நினைத்து வெளிநாடுகளுக்கு கடத்துவது அதிகரித்துள்ளது.நேற்று முன்தினம் இரவு ராமநாதபுரம் வனபாதுகாப்பு படைக்கு கிடைத்த தகவலின் பேரில் வனச்சரகர் திவ்யலட்சுமி, வனவர் ராமச்சந்திரன் குழுவினர் தேவிபட்டினம் பழைய போஸ்ட் ஆபிஸ் தெரு கடலோர காவல்படை அலுவலகம் அருகே பதுக்கி வைக்கப்பட்ட 24 கிலோ பச்சை கடல் அட்டைகளை பறிமுதல் செய்தனர். இதில் தொடர்புடைய சீனி மைதீனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை