உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தனியார் நிறுவனம் வாயிலாக ஓட்டுனர், நடத்துனர்கள் தேர்வு

தனியார் நிறுவனம் வாயிலாக ஓட்டுனர், நடத்துனர்கள் தேர்வு

அரசு போக்குவரத்து கழகங்களில் ஓட்டுனர்கள், நடத்துனர்கள் பணியிடங்கள், 20 சதவீதம் வரை காலியாக உள்ளன. இதனால், தனியார் நிறுவனம் வாயிலாக ஓட்டுனர், நடத்துனர்களை நியமித்து, அரசு பஸ்களை சீராக இயக்க, அரசு போக்குவரத்து கழகங்கள் முடிவு செய்துள்ளன. இதற்கு, தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, போராட்டங்களை நடத்தின. இதையடுத்து, இது தற்காலிக நடவடிக்கை தான் என, நிர்வாகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையில், சென்னையை தொடர்ந்து, திருநெல்வேலி, துாத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளில், ஓட்டுனர், நடத்துனர் பணியிடங்களுக்கு, தனியார் நிறுவனம் விளம்பர அறிவிப்பு வெளியிட்டுள்ளது.இது குறித்து, அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:ஓட்டுனர், நடத்துனர்கள் பற்றாக்குறையால், கூடுதல் அரசு பஸ்களை இயக்க முடியவில்லை. எனவே, பயணியருக்கு பாதிப்பு இன்றி பஸ்களை இயக்க, தற்காலிக நடவடிக்கையாக ஓட்டுனர், நடத்துனர்களை தனியார் வாயிலாக நியமிக்கும் பணியை துவங்கி உள்ளோம்.இவர்களை தேர்வு செய்தவுடன், கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். நிரந்தர பணியாளர்கள் வந்தவுடன், தனியார் பணியாளர்கள் விடுவிக்கப்படுவர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ