ஈ.வெ.ரா., நினைவிடத்தில் விஜயுடன் செல்பி தி.மு.க.,வினர் ஆர்வம்
சென்னை:ஈ.வெ.ரா., பிறந்த நாளை ஒட்டி, சென்னை எழும்பூரில் உள்ள அவரது நினைவிடத்திற்கு, தன் கட்சி நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் சென்றார். மற்றவர்களுக்கு விஷயம் தெரிந்து விடக்கூடாது என்பதற்காக, சிறிய நீல நிற சுசூகி ஸ்விட்ப் காரில் வந்திருந்தார். மாலையுடன் நடந்து சென்று, ஈ.வெ.ரா., சிலைக்கு மரியாதை செலுத்தினார். அங்கிருந்த தி.மு.க., இளைஞரணியினர், விஜயுடன் 'செல்பி' புகைப்படம் எடுப்பதற்கு போட்டி போட்டனர். சிலருடன் மட்டும் போட்டோ எடுத்துக் கொண்ட விஜய், 5 நிமிடத்திற்குள் அங்கிருந்து சென்று விட்டார்.