உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆட்சியாளர்கள் ஆதரவுடன் கள்ளச்சாராயம் விற்பனை

ஆட்சியாளர்கள் ஆதரவுடன் கள்ளச்சாராயம் விற்பனை

சென்னை:''டாஸ்மாக் கடைகளில் என்ன நடக்கிறது என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்,'' என, தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா கூறினார்.சென்னை, கிண்டி ராஜ்பவனில், கவர்னர் ரவியை நேற்று பிரேமலதா சந்தித்து பேசினார்.பின், அவர் அளித்த பேட்டி:கள்ளக்குறிச்சியில் இத்தனை உயிர்கள் போன பின், இன்றைக்கு இந்த அரசு ஆயிரக்கணக்கான லிட்டர் சாராயத்தை அழித்து விட்டதாக கூறுகிறது. இந்த நடவடிக்கைகளை ஏன் முன்கூட்டியே எடுக்கவில்லை? கடந்த ஆண்டு கள்ளச்சாராய சாவுகள் நடந்த போதே, சரியான நடவடிக்கை எடுத்து தடுத்திருந்தால், இத்தனை உயிர்களை இழக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது.கள்ளச்சாராயம் வரக் கூடாது என்பதற்காகத்தான் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. அப்படி இருக்கும்போது, கள்ளச்சாராயம் மீண்டும் ஏன் வருகிறது? இதற்கு யார் துணை போகின்றனர்? ஆட்சியாளர்கள், அதிகாரிகள், காவல் துறை துணையில்லாமல் நிச்சயமாக கள்ளச்சாராயம் காய்ச்ச முடியாது. ஆட்சியாளர்கள், அதிகாரிகள் உதவியோடு தான் கள்ளச் சாராயம் காய்ச்சப்படுகிறது; விற்கப்படுகிறது. டாஸ்மாக் கடைகளில் என்ன நடக்கிறது என்பதை, வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ