மேலும் செய்திகள்
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அட்மிட்
1 hour(s) ago
எதிர்த்து யாரும் போராடாத போது யாருடன் தமிழகம் போராடும்?
1 hour(s) ago
சென்னை:பெண் போலீசாருக்கான சர்வதேச துப்பாக்கி சுடும் போட்டிகள், ஜூன் 15 - 20ம் தேதி வரை நடத்தப்படுவது பற்றி, எல்லா மாநில டி.ஜி.பி.,க்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.செங்கல்பட்டு மாவட்டம் ஒத்திவாக்கத்தில், போலீசாருக்கான துப்பாக்கி சுடும் பயிற்சி தளம் உள்ளது. அங்கு, ஜூன் 15 - 20ம் தேதி வரை, பெண் போலீசாருக்கான சர்வதேச துப்பாக்கி சுடும் போட்டிகள் நடக்க உள்ளன. அதற்கான ஏற்பாடுகள் மற்றும் ஒருங்கிணைப்பு பணிகளை, தமிழக காவல் துறையின் செயலாக்கப்பிரிவு செய்து வருகிறது. துப்பாக்கி சுடும் போட்டிகள் நடத்தப்படுவது பற்றி, செயலாக்கப்பிரிவு ஐ.ஜி., ஜெயஸ்ரீ, அனைத்து மாநில டி.ஜி.பி.,க்களுக்கும் கடிதம் அனுப்பி உள்ளார்.உடன், எல்லை பாதுகாப்பு படையினர், சி.பி.ஐ., மற்றும் ஐ.பி., உள்ளிட்ட, 50 வகையான படைப்பிரிவினருக்கும் கடிதம் அனுப்பி உள்ளார். அதில் போட்டிகளுக்கான விதிமுறைகள், விண்ணப்ப படிவம், வீரர்கள் தங்கும் இடம், போக்குவரத்து வசதி என, அனைத்து விபரங்களும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
1 hour(s) ago
1 hour(s) ago