உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அபத்தமாக பேசுகிறார் ஸ்டாலின் மத்திய அமைச்சர் ஜோஷி ஆவேசம்

அபத்தமாக பேசுகிறார் ஸ்டாலின் மத்திய அமைச்சர் ஜோஷி ஆவேசம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஹுப்ளி: “ஊழல் மற்றும் தோல்வியை மறைக்கும் வகையில் தொகுதி மறுவரையறை விவகாரத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் கையில் எடுத்துள்ளார்,” என, மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி விமர்சித்துள்ளார். மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி நேற்று அளித்த பேட்டி:தொகுதி மறுவரையறை விவகாரத்தில், மத்திய அரசை ஸ்டாலின் எதிர்க்கிறார். அவருடைய எதிர்ப்பு தவறானது. தன் ஆட்சியில் நடக்கும் ஊழல் மற்றும் தோல்வியை மறைக்கவே, இதை ஊதிப் பெரிதாக்குகிறார். தொகுதிகளுக்கான எல்லை நிர்ணய ஆணையம் அமைக்கப்படாத நிலையில், தொகுதி மறுவரையறையை எதிர்ப்பதற்காக ஸ்டாலின் அமைக்கவிருக்கும் கூட்டு நடவடிக்கை குழு தேவையற்றது.தொகுதி மறுவரையறை தொடர்பாக, இதுவரை எந்த விதிமுறைகளும் இல்லாதபோது, ஸ்டாலின் அமைக்கவிருக்கும் கூட்டு நடவடிக்கை குழு என்ன செய்யும்?எல்லோரும் அச்சப்படுவது போல, எம்.பி., அல்லது எம்.எல்.ஏ.,க்களின் தொகுதிகளின் எண்ணிக்கையில் எந்தக் குறைப்பும் இருக்காது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெள்ளத் தெளிவாக சொல்லி விட்டார். அதையும் தமிழகம் வந்தபோதுதான் தெரிவித்துள்ளார். அதன்பின்பும், தொகுதி மறுவரையறை விஷயத்தில் ஸ்டாலின் அபத்தமாக பேசி வருகிறார். இது சரியல்ல,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 27 )

xyzabc
மார் 09, 2025 13:34

அபத்தம் பிறவி குணம். ஒன்னும் பண்ண முடியாது. வோட்டை வாங்கும் திறன் உள்ளது. வேற என்ன வேணும் ?


Selliah Ravichandran
மார் 09, 2025 12:27

It's Stalin blood (head of the department)


sridhar
மார் 09, 2025 11:56

ஒரு நாள் கேட்கவே உங்களுக்கு இவ்வளவு கடுப்பாவுதே , நாங்க நாலு வருஷமா torture அனுபவிக்கிறோமே .


Ramesh Sargam
மார் 09, 2025 11:43

ஸ்டாலின் அபத்தமாக பேசுகிறார் - மத்திய அமைச்சர். அட உங்களுக்கும் அவர் எப்படி பேசுகிறார் என்று தெரிந்து போச்சா...? சூப்பர்...


Kasimani Baskaran
மார் 09, 2025 10:53

மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுசீரமைக்கப்பட வேண்டும். இன்னும் பழைய தொகுதிகளை பிடித்து தொங்கிக்கொண்டு இருப்பது வன்மத்தின் உச்சக்கட்டம். இன்றைய நிலவரப்படி 18.5 லட்சம் வாக்காளர்களுக்கு ஒரு தொகுதி என்று தமிழகத்துக்கு வழங்கப்பட்டு இருக்கிறது - அனால் உத்தரப்பிரதேசத்துக்கு 25 லட்சம் வாக்காளர்களுக்கு ஒரு தொகுதி. இதே அடிப்படையில் தமிழகத்துக்கு தொகுதிகளை குறைப்பதை விட உத்தரப்பிரதேசத்துக்கு 80ல் இருந்து 108 என்று அதிகரிக்க வேண்டும்.


RAMAKRISHNAN NATESAN
மார் 09, 2025 10:13

உங்களுக்கும் தெரிஞ்சு போச்சா ?


vbs manian
மார் 09, 2025 09:37

பிறக்காத குழந்தைக்கு எப்போது கல்யாணம் என்று யோசிக்கிறார்கள். குஜராத் தமிழக மாநிலங்களின் மக்கள் தொகை ஏறக்குறைய சமம். தமிழகத்தில் நாற்பது குஜராத்தில் இருபத்தியோரு எம் பி தொகுதிகள். எப்படி சார்.


JAYACHANDRAN RAMAKRISHNAN
மார் 09, 2025 08:29

நாங்க காத்துல கம்பு சுத்துவோம். உனக்கென்ன வந்தது. ஹிந்தி தெரியாது போட தெரியவில்லைன்னா கத்துக்கவும் மாட்டோம். குண்டு சட்டிக்குள் தான் குதிரை ஓட்டுவோம். ஜல்லிக்கட்டுல தான் மாடு பிடிப்போம். போவியா வடக்கால. தமிழ்லே மெய் எவ்வளவுன்னு கேட்டு பாரு எத்தனை பேரு சரியா சொல்லுவாங்க. இதுவே வேற இருக்குற 39 தொகுதியை நீங்க வேற முப்பதா குறைச்சிட்டா நாங்க வேற தேர்தல் வியுகம் அப்படிங்கற பேருல ஒவ்வொரு இரண்டு வருசத்துக்கு ஒரு தடவை ஒரு கட்சியை டெவலப் பண்ணி எங்க கட்சியோடு சேர்த்துட்டு அதுக்கு இப்ப எல்லாம் சினிமா மோகத்தாலே விளம்பர தூதுவர் மாதிரி சினிமா காரனை தேடி பிடிச்சு கொண்டு வர்றோம். நீங்க தொகுதியை குறைச்சிட்டா நாங்க எப்படி அவங்களுக்கு தொகுதியை கொடுத்து திருப்தி செய்யறது. அப்புறம் எங்க கூட்டணி தான் அதிக கட்சி கொண்ட வலுவான கூட்டணி அப்படின்னு சொல்லிக்கறது. இருக்கற தலைவலிலே இந்த தலைவலி வேற.


ManiK
மார் 09, 2025 07:50

அபத்தம், அல்பம், அலப்பறை, அதிகாரதுஷ்ப்ரயோகம் இதுவே இன்னும் 1 வருடம் வாழும் திமுக அரசின் தந்திர மந்திரம்.


अपावी
மார் 09, 2025 07:36

என்ன அமித்சா தெள்ளத்தெளிவாக எழுத்து பூர்வமா தெரிவிக்க முடியுமா? உ.பி ல தொகுதிகளை அதிகரிக்க மாட்டோம்னு உறுதி அளிக்க முடியுமா?


ஆரூர் ரங்
மார் 09, 2025 10:00

அவர் எழுதி தர வேண்டும் என சட்டம் இருக்கிறதா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை