உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மாநில சுயாட்சியை வென்றெடுக்க வேண்டும்: முதல்வர்

மாநில சுயாட்சியை வென்றெடுக்க வேண்டும்: முதல்வர்

சென்னை:''தி.மு.க., வெள்ளி விழா, பொன்விழா கொண்டாடியபோது, ஆட்சியில் இருந்தது. பவள விழா கொண்டாடும் நேரத்திலும் ஆட்சியில் உள்ளது. நுாற்றாண்டு விழா கொண்டாடும்போதும், ஆட்சியில் இருக்கும். மாநில சுயாட்சியை வென்றெடுக்க வேண்டும். வரும் 2026 தேர்தலில், இதுவரை எந்த கட்சியும் பெற்றிராத வெற்றியை பெற உறுதியேற்போம்,'' என, முதல்வர் ஸ்டாலின் பேசினார்.தி.மு.க., முப்பெரும் விழா, நேற்று சென்னை ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் நடந்தது. முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:தி.மு.க., வெள்ளி விழா, பொன்விழா கொண்டாடியபோது, ஆட்சியில் இருந்தது. பவள விழாவிலும் ஆட்சியில் உள்ளோம்.

நெருக்கடி

நுாற்றாண்டு விழாவிலும் தி.மு.க., ஆட்சியில் இருக்கும். தி.மு.க., தேவை இன்னும் 100 ஆண்டுகளுக்கு உள்ளது. கடந்து வந்த 75 ஆண்டுகளில், எத்தனையோ சாதனைகளை செய்துள்ளோம். தமிழகத்தை நோக்கி, இந்தியாவை திரும்பிப் பார்க்க வைத்துள்ளோம். எந்த மாநில அரசும், ஒரு மாநிலத்திற்கு இத்தனை நன்மைகள் செய்து தந்ததில்லை எனக் கூறும் அளவுக்கு, தி.மு.க., அரசு, தமிழகத்தை வளமிக்க மாநிலமாக மேம்படுத்தி உள்ளது. எனினும், நம்முடைய எல்லாக் கனவுகளும் நிறைவேறவில்லை. மாநில உரிமைகளை வழங்க, ஒரு மத்திய அரசு அமையவில்லை. நிதி உரிமை உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு, இன்னமும் போராட வேண்டிய நிலையில் உள்ளோம். இப்படிப்பட்ட நெருக்கடிக்கு இடையில், தமிழகத்தை எல்லாவற்றிலும் முன்னேற்ற வேண்டும் என்ற ஒற்றை இலக்கோடு தி.மு.க., நடைபோடுகிறது. மாநில சுயாட்சி கொள்கை, நம் உயிர் நாடி கொள்கையில் ஒன்று. இப்போதுள்ள சூழலில் மாநில சுயாட்சியை வென்றெடுக்க வேண்டும். நான் தலைமைப் பொறுப்பேற்று எதிர்கொண்ட தேர்தல் அனைத்திலும், வெற்றி பெற்றுள்ளோம். அடுத்தடுத்து நடக்க உள்ள தேர்தலிலும் வெற்றி பெற உள்ளோம். ஆணவத்தோடு கூறவில்லை; உங்கள் மீதுள்ள நம்பிக்கையில் கூறுகிறேன். அடுத்து நம் இலக்கு, 2026 தேர்தல். இதுவரை இத்தகைய வெற்றியை எந்த கட்சியும் பெற்றதில்லை என, 2026ல் வரலாறு சொல்ல வேண்டும். அந்த வரலாறை எழுத நீங்கள் தயாரா? இந்த உணர்வு வெற்றி சரிதமாக மாற, முப்பெரும் விழாவில் சபதம் ஏற்போம்!இவ்வாறு பேசினார்.

விருதாளர்கள் கவுரவிப்பு

கருணாநிதி அறக்கட்டளை சார்பில், சிறப்பாக பணியாற்றிய, தி.மு.க., நிர்வாகிகள் 17 பேருக்கு, விருது, சான்றிதழ், 1 லட்சம் ரூபாய் பொற்கிழி வழங்கப்பட்டது. பெரியார் விருது அறிவிக்கப்பட்ட பாப்பம்மாளுக்கு பதிலாக, அவரது பேத்தி ஜெயசுதா விருது பெற்றுக் கொண்டார்.அறந்தாங்கியைச் சேர்ந்த மிசா ராமநாதனுக்கு, அண்ணா விருது; எம்.பி., ஜெகத்ரட்சகனுக்கு, கலைஞர் விருது; கவிஞர் தமிழ்தாசனுக்கு, தொடர்ச்சி 14ம் பக்கம்பாவேந்தர் விருது; வி.பி.ராஜனுக்கு, பேராசிரியர் விருது; முன்னாள் மத்திய அமைச்சர் பழனிமாணிக்கத்திற்கு, மு.க.ஸ்டாலின் விருது வழங்கப்பட்டன.ஏ.ஐ., தொழில்நுட்பம்முதல்வர் ஸ்டாலின் அருகே, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அமர்ந்து வாழ்த்துரை வழங்குவது போன்ற காட்சி, ஏ.ஐ., தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டு இருந்தது.

சரித்திரத்தை மாற்றி எழுதும் கமிட்டியில் 14 பேர் பிராமணர்கள்: துரைமுருகன் ஆவேசம்

அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது:நம் பகை இன்னும் விட்டுவிடவில்லை. அன்று ராஜாஜி, ஹிந்தியை திணித்தார். தற்போது மீண்டும் இரு மொழிக் கொள்கையை எடுத்து விடுங்கள் என்கின்றனர். அதே போராட்டத்தை மீண்டும் எடுக்க வேண்டிய நிலைக்கு வந்துள்ளோம். அதே ஜாதிதான், மறைமுகமாக பல காரியங்களை செய்கிறது. சமீபத்தில் டில்லி அரசு, இந்தியாவின் சரித்திரத்தை மாற்றி எழுதுவதற்காக, ஒரு கமிட்டி அமைத்துள்ளது. தற்போதுள்ள சரித்திரத்தில் என்ன கேடு? ஹரப்பா மொஹஞ்சதாரோ திராவிட நாகரிகம் என்றோம்; அது ஆரியர்கள் நாகரிகம் என, கமிட்டி கூறுகிறது. அதாவது, சரஸ்வதி நாகரிகம் என்கிறது. கமிட்டியில் 17 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். மூன்று பேர் அரசு அதிகாரிகள்; மீதி 14 பேரும் பிராமணர்கள். எனவே, மறுபடியும் பழைய பல்லவியை பாட வேண்டிய நிலை. இதே நிலை தொடர்ந்தால், தி.மு.க., தன் வீரியத்தைக் காட்டும் நிலை வரும். இவ்வாறு அவர் பேசினார்.

'துணை முதல்வராக்க ஏன் தயக்கம்?'

ஸ்டாலின் விருது பெற்ற, முன்னாள் மத்திய அமைச்சர் பழனிமாணிக்கம் பேசியதாவது: யாரை முன்னிலைப்படுத்தினால், பொதுமக்களைக் கவர முடியுமோ, தொண்டர்களை கட்சி வேலை செய்ய வைக்க முடியுமோ, அவர்களை முன்னிறுத்த வேண்டும். உங்களுக்கு இன்னும் என்ன தயக்கம்? உதயநிதியை துணை முதல்வராக்க வேண்டாமா?அன்பழகன் உங்களை துணை முதல்வராக ஏற்றுக் கொண்டார். அவரை விட பெரியவர்கள் யாரும் இல்லை. நாங்கள் ஏற்றுக் கொள்வோம். காலம் தாழ்த்தாதீர்கள்.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

sankaran
செப் 18, 2024 18:21

அப்போ எதுக்கு மத்திய அரசு மது ஒழிப்பு சட்டம் கொண்டு வர வேண்டும் என்று சொல்றீங்க.. நீங்களே கொண்டு வரலாமே...


sankaranarayanan
செப் 18, 2024 08:44

ஏன் துறை முருகனுக்கு பிராமணர்களைப்பற்றி குறைவாக பேசாவிட்டால் என்ன அவரது பதவியாபோயிடும் சம்பந்தமே இல்லாமல் ஒரு சமூகத்தினரை எதற்காக குறைவாக பேசவேண்டும் அவர்கள் நாடு சுதந்திரம் அடைய எவ்வளவு பேர்கள் உயிர் தியாகம் செய்திருக்கிறார்கள் இலக்கியத்தில் எத்தனை பேர்கள் தேர்வு பெற்று விளங்கி இருக்கிறார்கள் ஆதலால் பொதுவாக ஒரு சமூகத்தினரை இழிவாக பேசக்கூடாது இது வம்பை விலைக்கு வாங்குவது போலாகும். ஊருக்கு இளைத்தவன் புள்ளையார்கோயில் ஆண்டி என்பதுபோல இவருக்கு இளைத்தவர்கள் பிராமணர்கள்தானா இது விதண்டா வாதம் இதுதான் ஜனநாயாகமா?


GMM
செப் 18, 2024 07:21

மாநில சுயாட்சியா ? அனைத்து வளங்கள் ஏற்படுத்தியது தென் இந்திய மக்கள். தமிழ் சமுதாயம். சுரண்டி பிழைப்பது யார்? மாநில எல்லையை அந்நியரிடம் இருந்து திராவிட கூட்டம் ஒரு நொடி பாதுகாக்க நிதி, மனித சக்தி, போர் பயிற்சி உள்ளதா ? திவால் நிலையில் மாநிலம். மாநிலத்தை , பெண்களை அந்நியரை சூறையாட விட்டுவிட்டு , கொத்தடிமை போல் திராவிடர்கள் வாழ்வீர்கள் . உங்களை நம்பி தமிழர்கள் ஒரு பைசா வரி செலுத்த மாட்டார்கள்? . மாவட்ட சுயாட்சி முதலில் கொடுக்க வேண்டும். உழைக்கும் மாவட்டம் ஓட்டுக்கு சுரண்டப்பட்டு விட்டது. மத்திய அரசு திராவிட பிரிவினை கூட்டத்தை வளர்கிறது . வழக்கில் சொதப்பி வருகின்றனர்.


xyzabc
செப் 18, 2024 01:38

Rahul, Mamta can help you.


முக்கிய வீடியோ