உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வங்கதேசத்தில் சிக்கிய தமிழர்களை அழைத்து வர நடவடிக்கை: தமிழக அரசு உறுதி

வங்கதேசத்தில் சிக்கிய தமிழர்களை அழைத்து வர நடவடிக்கை: தமிழக அரசு உறுதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: வங்கதேசத்தில் இருந்து தாயகம் திரும்ப முடியாமல் சிக்கியுள்ள தமிழர்களை அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு உறுதி அளித்துள்ளது.வங்கதேசத்தில் அரசுக்கு எதிராக மாணவர்கள் நடத்தும் போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டு, 120 பேர் பலியானதை அடுத்து, நாடு முழுதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு ராணுவம் ரோந்து வருகிறது. வங்கதேச எல்லையில் தமிழக மாணவர்கள் தவித்து வருகின்றனர். தமிழக மாணவர்களை கல்லூரி பஸ் மூலம் எல்லையில் இறக்கிவிட்டுச் சென்றதாக தகவல் வெளியானது.இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வங்கதேசத்தில் இருந்து தாயகம் திரும்ப முடியாமல் சிக்கியுள்ள தமிழர்களை அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும். முதற்கட்டமாக 2 விமானங்கள் மூலம் 35 தமிழர்கள் இன்று தாயகம் திரும்ப உள்ளனர். விமான நிலையத்தில் இருந்து அவரவர் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். 2ம் கட்டமாக 60 பேரை அழைத்து வர நடவடிக்கை மேற்கொள்ளப்படும். முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல் படி, இந்திய தூதரகத்தின் ஒத்துழைப்போடு தமிழர்களை மீட்க முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

ManiK
ஜூலை 21, 2024 20:08

இத பதிவிடும்போது உங்களுக்கே சிரிப்பு வரலையா?!!


RAMAKRISHNAN NATESAN
ஜூலை 21, 2024 17:46

அவர்கள் தமிழர்களா ? அல்லது அரபு ஊடுருவல்காரர்களின் வழிவந்தவர்களா ??


RAMAKRISHNAN NATESAN
ஜூலை 21, 2024 17:44

உக்ரைனில் இருந்து மீட்டது போல தளபதி சாரி மன்னர் மீட்பார் ....


அப்புசாமி
ஜூலை 21, 2024 17:29

பொழப்புக்காக பங்களா தேஷுக்கு போயிட்டாங்களா


Devanand Louis
ஜூலை 21, 2024 16:02

மதுரை திருப்பரங்குன்றம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் தோப்பூர் கிராம வீ எ ஓ அலுவலகஊழியர்கள் செய்யும் கொடுமையான லஞ்சம்வாங்கும் கொள்ளைக்கூடாரம் - பட்டா விண்ணப்பங்களை வேண்டுமென்றே தாமதம் செய்கிறார்கள் , பின் வேண்டாத டாக்குமெண்டுகளை கேட்டு காலம் தாழ்த்தி பெரிய தொகையை கேட்டு லஞ்சம்வான்ங்குகிறார்கள்


N Sasikumar Yadhav
ஜூலை 21, 2024 15:41

பாரதத்தை ஆக்கிரமித்து கொள்ளையடித்த ஆங்கீலேயனைவிட மிகமிக கேவலமாக பிரித்தாளும் சூழ்ச்சி செய்கிறது திருட்டு திமுக . பாரத பிரதமர் பாரதியர்கள் அனைவரையும் அழைத்து கொண்டு வருவார் . அதற்கு உக்ரைனுக்கு ஒட்டிய ஸ்டிக்கர் மீதமிருக்கும் அதை வங்காளத்திலுருந்து வருபவர்களுக்கு ஒட்ட தயாராக இருக்கிறது திருட்டு திராவிட மாடல்


Kumar Kumzi
ஜூலை 21, 2024 15:10

சர்வ அதிகாரங்களும் கொண்ட டாஸ்மாக் சனாதிபதி சொல்லுறாரு பாருங்க


R.MURALIKRISHNAN
ஜூலை 21, 2024 15:03

எங்க எது நடந்தாலும் நாங்க ஸ்டிக்கர் ஒட்டுவோம். அதான் மத்திய அரசு இந்தியர்கள் திரும்ப நடவடிக்கை எடுத்திருக்குதில்லேன்னு நீர் நினைப்பது சரிதான். விமானம் இந்தியாவில் தரையிரங்கியதும் எங்க அமைச்சர்கள் அருகில் நின்னு போஸ் கொடுத்து போட்டா எடுத்து ஸ்டாலின் தான் செஞ்சாரு, விடியல் வரும்னு சொன்னாருன்னு செய்தி போடுவோமில்ல


ஆரூர் ரங்
ஜூலை 21, 2024 14:57

ஸ்டாலின் தானே நேரடியாக சென்று அழைத்து வரலாம். பெரும்பாலும் சிறுபான்மையினர் என நினைக்கிறேன்.


Palanisamy Sekar
ஜூலை 21, 2024 14:54

ஸ்டிக்கர் ஓட்டுவதில் கில்லாடிகள் இவர்கள். கூச்சநாச்சமே இல்லாமல் இந்திய வெளியுறவுத்துறை மேற்கொண்ட முயற்சிகளுக்கு இவர்கள் சுயதம்பட்டம் அடிக்கின்றார்கள். அதற்கான பணியினை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கர் எப்போதோ துவங்கிவிட்டார்கள் சில நூறு மாணவர்கள் பாதுகாப்பாக அழைத்துவரப்பட்டனர். அதனையெல்லாம் மறைத்து என்னவோ இவர் திமுக தொண்டர் படையை அனுப்பி சண்டையிட்டு மீட்டுவரப்போவது போல பீலா விடுகின்றார்கள். திராவிட மாடல் ஆட்சியினரின் செயல் கோமாளிக்கூத்து போன்று இருக்கிறது.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை