வாசகர்கள் கருத்துகள் ( 1 )
வாழ்தூக்கள்
மேலும் செய்திகள்
பாஜ கூட்டணிக்கான காரணம்: முதல்வருக்கு இபிஎஸ் பதில்
2 hour(s) ago
ஆராய்ச்சி ஊக்கத்தொகை பெற 31க்குள் விண்ணப்பிக்கலாம்
3 hour(s) ago
கீழடி: தொல்லியல் மற்றும் தமிழர் கலாச்சாரம் அறிய பஞ்சாப், மத்திய பிரதேச மாணவர்கள் நேற்று சிவகங்கை மாவட்டம் கீழடிக்கு படையெடுத்தனர்.மாநிலங்களுக்கு இடையேயான கலாசாரம், பண்பாடு, பழக்க வழக்கங்கள் பற்றி அறிய பஞ்சாப், மத்திய பிரதேசத்தை சேர்ந்த மாணவர்கள் பேராசிரியர்கள் தமிழகம் வந்துள்ளனர். இம்மாணவர்கள் நேற்று கீழடியில் தொல்லியல் ஆராய்ச்சி பகுதியையும், அங்கு கண்டெடுக்கப்பட்ட தொல்லியல் பொருட்களையும், திறந்த வெளி அருங்காட்சியகத்தையும் பார்வையிட்டனர்.2600 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்கள் நாகரிகம், கல்வி, விவசாயம், தொழில்நுட்பம் உள்ளிட்ட அம்சங்களில் சிறந்து விளங்கியதற்கான சான்று கிடைத்த இடத்தை பார்வையிட்டு ஆச்சர்யமுற்றனர். ஏழாம் கட்ட திறந்த வெளி அருங்காட்சியகத்தில் சுடுமண் பானைகள், உறைகிணறுகள் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தனர்.பஞ்சாப் மாணவர்கள் கூறியதாவது: ஹரப்பா, மொகஞ்சதாரோவை மிஞ்சும் வகையில் இங்கு மனிதர்கள் நவ நாகரிகத்துடன் வாழ்ந்துள்ளனர். குறியீடுகள், படங்கள் மூலம் வகைப்படுத்தியுள்ளனர். குடியிருப்பு, தொழிற்சாலைகளும் இருந்ததை அறிந்தோம் என்றனர்.* மதுரை அரபிந்தோ மீரா சர்வதேச பள்ளி மாணவ, மாணவிகளும் பார்வையிட்டனர்.
வாழ்தூக்கள்
2 hour(s) ago
3 hour(s) ago