மேலும் செய்திகள்
20 மீனவருக்கு விசைப்படகு ஓட்டுநர் உரிமம்
08-Feb-2025
சென்னை:தமிழகத்தில் முதல் கட்டமாக, எட்டு வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில், கணினி 'டெஸ்ட் டிராக்' அமைக்க, ஆய்வு பணிகள் துவக்கப்பட்டுள்ளன.தமிழகத்தில் நடக்கும் சாலை விபத்துகளுக்கு, 80 சதவீதம் ஓட்டுநர்களின் கவனக்குறைவே காரணமாக இருக்கிறது. விழிப்புணர்வு
எனவே, ஓட்டுநர் உரிமம் வழங்குவதை முறைப்படுத்தவும், போதிய அளவில் பயிற்சி மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், போக்குவரத்து துறைக்கு, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மொத்தம் உள்ள, 91 வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில், முதல் கட்டமாக 20 அலுவலகங்களில், ஓட்டுநர் தேர்வு தளங்களை, கணினி மயமாக்கப்பட்ட, ஓட்டுநர் தேர்வு தளங்களாக மாற்ற முடிவு செய்யப்பட்டுளது. தற்போது, எட்டு அலுவலகங்களில் ஆய்வுப் பணிகள் துவக்கப்பட்டுள்ளன.இதுகுறித்து, தமிழக போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் கூறியதாவது: ஓட்டுநர் உரிமத்தின் தரத்தை உயர்த்தவும், உரிய பயிற்சி பெற்று தகுதியானவர்கள் மட்டும் ஓட்டுநர் உரிமம் பெறவும், புதிய நடைமுறை கொண்டு வரப்பட உள்ளது. துல்லியமாக பதிவு
கணினி மயமாக்கப்பட்ட, ஓட்டுநர் தேர்வு தளங்கள் வாயிலாக, ஓட்டுனர் உரிமத்திற்கான தேர்வு நடத்தப்படும் போது, தேர்வு முடிவுகள் அனைத்தும் கணினி வாயிலாக துல்லியமாக பதிவு செய்யப்படும். திறமை அடிப்படையில் ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும். மொத்தம் 20 வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில், இந்த புதிய முறை அமலுக்கு வர உள்ளன.இதற்காக, தனியார் நிறுவனங்களின், சி.எஸ்.ஆர்., எனப்படும், சமூக பொறுப்புணர்வுக்கான நிதியை, பயன்படுத்த முடிவு செய்தோம். சில ஆட்டோ மொபைல் நிறுவனங்கள் உதவியுடன், திருவண்ணாமலை, கடலுார், சேலம், நாமக்கல், திண்டுக்கல், பெரம்பலுார், திருச்சி, மதுரை ஆகிய எட்டு வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில், கணினி டெஸ்ட் டிராக்குகள் அமைக்க, முதற்கட்ட ஆய்வு துவக்கப்பட்டுள்ளது. விரைவில் இப்பணி முடிக்கப்பட்டு, அடுத்த கட்ட பணிகள் துவக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
08-Feb-2025