உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விக்கிரவாண்டியில் த.வெ.க., மாநாடு: அனுமதி கோரி எஸ்.பி., ஆபீசில் மனு

விக்கிரவாண்டியில் த.வெ.க., மாநாடு: அனுமதி கோரி எஸ்.பி., ஆபீசில் மனு

விழுப்புரம் : விழுப்புரத்தில் நடைபெற உள்ள தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு அனுமதி மற்றும் பாதுகாப்பு கோரி, அக்கட்சி யின் மாநில பொதுச்செயலர் புஸ்சி ஆனந்த், கலெக்டர் மற்றும் எஸ்.பி., அலுவலகங்களில் மனு அளித்தார்.ஏ.டி.எஸ்.பி., திருமாலிடம் அளித்த மனு விபரம்:த.வெ.க.,வின் முதல் மாநில மாநாடு, விழுப்புரம் அடுத்த வி.சாலை கிராமத்தில் வரும் செப்., 23ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது; அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம். மாநாட்டில் கட்சித் தலைவர் விஜய் பங்கேற்கிறார்.மாநாடு நடத்த 85 ஏக்கர் நிலம் வாடகைக்கு பெற்றுள்ளோம். மாநாட்டிற்கு 1.50 லட்சம் பேர் வருவர் என எதிர்பார்க்கிறோம். மாநாட்டிற்கு தமிழகம் முழுதும் இருந்து வரும் வாகனங்களை முறையாக நிறுத்த ஏற்பாடு செய்ய திட்டமிட்டுள்ளோம்.இதற்காக விழுப்புரம் - சென்னை சாலையின் இருபுறமும், 68 ஏக்கர் நிலத்தை வாடகைக்கு பெற்றுள்ளோம். இரு சக்கர வாகனங்களை நிறுத்த தனியாக 5 ஏக்கர் நிலத்தை வாடகைக்கு பெற்றுஉள்ளோம். பொதுமக்களுக்கு இடையூறின்றி மாநாட்டை முறையாக நடத்துவதாக உறுதியளிக்கிறோம். எனவே, மாநாட்டிற்கு தேவையான முழு பாதுகாப்பை வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.தொடர்ந்து மாநாட்டிற்கு அனுமதி கோரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் யோகஜோதியிடமும் மனு அளிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

sundarsvpr
ஆக 29, 2024 09:30

விஜய் கட்சியின் முதல் மாநாடா அல்லது ஜோசப் விஜய் கட்சியின் முதல் மா நாடா என்பதனை மக்கள் அறிய விரும்புகின்றனர். திராவிட முன்னேற்ற கழகம் ஹிந்து விரோத கட்சி அல்ல. துர்கா அம்மையார் ஹிந்து கடவுள் பக்தை . ஆனால் இவர் துணைவர் ஸ்டாலின் ஹிந்து கடவுள்களை மட்டும் வணங்காதவர். இவரின் நேர்மை ஏற்கத்தக்கது. இந்த நேர்மையை ஜோசப் விஜய்யிடம் மக்கள் எதிர்பார்க்கின்றனர். தற்போது திரைப்பட நடிகர்களின் பொழுதுபோக்கு அரசியல் முக்கிய இடம் பிடிப்பதுதான்.


angbu ganesh
ஆக 29, 2024 09:39

எதை நேர்மைண்றிங்க இவர் ஹிந்து கடவுளை அசிங்க படித்திட்டு ஹிந்துக்களின் மனச நோகடிச்சிட்டு வேற மதத்தினரின் கடவுளை கடவுளா ஏத்துக்கிட்ட ஸ்டாலின் அவர்களா நேர்மையானவர்?,


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை