உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஜூன் 28, 29ல் தமிழ் தகவல் தொழில்நுட்ப கருத்தரங்கம்

ஜூன் 28, 29ல் தமிழ் தகவல் தொழில்நுட்ப கருத்தரங்கம்

சென்னை: தமிழ் மொழியின் பயன்பாட்டை, இணையதளத்தில் அதிகரிப்பதற்கான தகவல் தொழில்நுட்ப ஆராய்ச்சி கருத்தரங்கம், அடுத்த மாதம் 28, 29ம் தேதிகளில், சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடக்க உள்ளது.இந்த கருத்தரங்கில், முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், கணினி மென்பொருள் நிறுவனங்கள், மார்க்கெட்டிங் ஏஜென்சிகள், ரோபோட்டிக் தொழில்நுட்ப நிறுவனங்களும், அவற்றின் வல்லுனர்களும் பங்கேற்க உள்ளனர்.இதில், மென்பொருள் உருவாக்கம், கையடக்க கருவிகளில் தமிழ் மொழியின் உள்ளீடு, செயற்கை நுண்ணறிவில் தமிழ், குறித்து ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பித்து, ஆய்வாளர்கள் விளக்குவர். இந்த கருத்தரங்கை, உலகத்தமிழ் வம்சாவளி அமைப்பின் தலைவர் செல்வக்குமார் ஒருங்கிணைத்து நடத்த உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை