மேலும் செய்திகள்
வாக்காளர் திருத்தம் முறையாக நடக்கவில்லை!
9 hour(s) ago | 15
1 கோடி பேர் கையெழுத்து தமிழக காங்., பெருமிதம்
9 hour(s) ago | 3
துரோகிகள் இருக்கும் வரை ராமதாசுடன் சேர மாட்டேன்: அன்புமணி
9 hour(s) ago | 1
சென்னை:சென்னை செங்குன்றத்தில், 2016ல் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. அப்போது, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை குடோனில் பதுக்கி, மாநிலம் முழுதும் விற்றது தெரியவந்தது. அங்கு பறிமுதல் செய்த டைரியில், ஐ.பி.எஸ்., அதிகாரிகள், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் ரமணா உள்ளிட்ட பலர், லஞ்சமாக பணம் பெற்ற தகவல் இடம் பெற்றிருந்தது.உயர் நீதிமன்ற உத்தரவுபடி, சி.பி.ஐ., வழக்கை விசாரித்தது. கிடங்கு உரிமையாளர்கள் மாதவராவ் உட்பட ஆறு பேருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்து, 2021ல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. வழக்கு விசாரணை சென்னை சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.இந்நிலையில், முன்னாள் அமைச்சர்கள், காவல்துறை அதிகாரிகள் உட்பட 11 பேருக்கு எதிராக, 2022 நவம்பரில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.கடந்த முறை வழக்கு விசாரணைக்கு வந்த போது, கூடுதல் குற்றப்பத்திரிகையில், குற்றம் சாட்டப்பட்ட நபர்களில், இன்னும் இரண்டு பேருக்கு எதிராக வழக்கை நடத்த, அனுமதி, ஒப்புதல் கடிதம் கிடைக்கவில்லை என, சி.பி.ஐ., தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு அதிருப்தி தெரிவித்த சிறப்பு நீதிமன்றம், விசாரணையின் தற்போதைய நிலை என்ன என்பது குறித்து, சி.பி.ஐ., விசாரணை அதிகாரி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டிருந்தது.வழக்கு விசாரணை, நேற்று மீண்டும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி மலர்வாலண்டினா முன் வந்தது. அப்போது விசாரணை அதிகாரி நேரில் ஆஜரானார். அவரிடம், வழக்கின் தற்போதைய நிலை என்ன என்ன; விசாரணைக்கு அனுமதி கிடைக்காத இருவருக்கு அரசின் ஒப்புதல் கிடைத்து விட்டதா என, நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த விசாரணை அதிகாரி, 'அரசின் ஒப்புதல் கிடைத்து விட்டது; அந்த ஒப்புதல் கடிதம் சி.பி.ஐ., பரிசீலனையில் உள்ளது' என்றார்.உடன், 'பரிசீலனை முடிந்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய எவ்வளவு நாட்களாகும்' என்று, நீதிபதி கேட்டார். விரைவாக தாக்கல் செய்வதாக விசாரணை அதிகாரி பதில் அளித்தார். இதையடுத்து, வழக்கு விசாரணையை ஏப்ரல் 15க்கு நீதிபதி தள்ளிவைத்தார்.
9 hour(s) ago | 15
9 hour(s) ago | 3
9 hour(s) ago | 1