உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வீரன் சரக்கில் வீரியம் இல்லை: விற்பனை செய்ய டாஸ்மாக் தடை

வீரன் சரக்கில் வீரியம் இல்லை: விற்பனை செய்ய டாஸ்மாக் தடை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'ஆல்கஹால்' அளவு குறைவாக இருப்பதால், நான்கு வகை மதுபானங்களை விற்க, கடை ஊழியர்களுக்கு 'டாஸ்மாக்' நிர்வாகம் தடை விதித்துள்ளது.பீர் வகைக்கு ஆயுள் காலம் ஆறு மாதங்கள். மது வகைகளுக்கு ஆயுள் காலம் கிடையாது. ஆனால், அவற்றில் ஆல்கஹால் அளவு 42.84 சதவீதம் இருக்க வேண்டும். அதை விட குறைவாகவோ, கூடுதலாகவோ இருந்தால் விற்கக்கூடாது.இந்நிலையில், குறிப்பிட்ட நான்கு மது வகைகள் கடைகளில் இருப்பு இருந்தால், அவற்றை விற்காமல், கிடங்கிற்கு திருப்பி அனுப்புமாறு, மாவட்ட மேலாளர்களுக்கு டாஸ்மாக் உத்தரவிட்டுள்ளது.இது குறித்து, டாஸ்மாக் சென்னை வடக்கு மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் இருந்து, கடை ஊழியர்களுக்கு அனுப்பியுள்ள தகவல்:ட்ரோபிகானா வி.எஸ். ஓ.பி., பிராந்தி பேட்ச் எண் 013/ 2020, ஓல்டு சீக்ரெட் பிராந்தி பேட்ச் எண் 847/ 2018, வீரன் ஸ்பெஷல் பிராந்தி பேட்ச் எண் 082/ 2024 ஆகிய சரக்குகள் தங்கள் கடையில் இருந்தால், உடனே அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மேற்கண்ட பேட்ச் எண், தேதி உள்ள சரக்குகளை கண்டிப்பாக விற்கக்கூடாது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.மற்றொரு தகவலில், 'தலைமை அலுவலக உத்தரவின்படி, வீரன் ஸ்பெஷல் பிராந்தி - 180 மி.லி., பேட்ச் எண் 082 - 6.7.2024 விற்பனைக்கு தடை செய்யப்பட்டுள்ளது. எனவே, கடை பணியாளர்கள் மேற்கண்ட பிராந்திகளை விற்க வேண்டாம். கடையில் எவ்வளவு சரக்கு இருப்பு உள்ளது என்று கணக்கீடு செய்து, அலுவலகத்திற்கு தெரியப்படுத்த வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறியதாவது:மது வகையில் அனுமதிக்கப்பட்ட அளவை விட ஆல்கஹால் குறைவாகவோ, கூடுதலாகவோ இருக்கக்கூடாது; அதன்படி இருந்தால், அந்த மது வகை விற்பனைக்கு தகுதியற்றதாக கருதப்படும். இதற்காக, மது வகைகளின் தரம் தொடர்ந்து, மாதிரி எடுத்து பரிசோதிக்கப்படும். தற்போது, நான்கு மது வகைகளின் குறிப்பிட்ட பேட்ச் எண் உடைய மது வகைகளில், ஆல்கஹால் அளவு குறைவாக இருப்பதால், திருப்பி அனுப்ப அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 28 )

Ram pollachi
ஜூலை 28, 2024 14:17

சில குவாட்டர் பாட்டிலை தூக்கி போட்டால் பல துண்டுகளாக உடைந்து உரு தெரியாமல் போய்விடும்... ஆனால் பல குவாட்டர் பாட்டில்கள் உடைவது கடினம்... ஆக பாட்டில்களின் தரமே கேள்விகுறி? சரக்கின் நிலை??????


Ramesh Sargam
ஜூலை 28, 2024 13:40

கல்வராயன்மலையில் காய்ச்சப்படும் சரக்கில் வீரியம் அதிகம். அதை குடித்து செத்தால், முதல்வரின் நிவாரணம் கூட அதிகம்


Mohanakrishnan
ஜூலை 28, 2024 13:35

கள்ளகுறிச்சி சரக்கை கலந்து கட்டினால் கல்லாவும் கட்டலாம், வீரியம் இருக்கும். 10 ரூ சர்க்கை உள்ளே வைத்துவிட்டு திண்டாடுகிறார்கள்


Ramesh Sargam
ஜூலை 28, 2024 13:22

இரும்புக்கரத்தில் இரும்பு இல்லை. எல்லாம் துருப்பிடித்து கெட்டுப்போய்விட்டது.


venkatapathy
ஜூலை 28, 2024 13:16

போதை கம்மியா உள்ள வீரன் வேண்டாம் எங்களுக்கு உடனே சுருக்குன்னு போதை ஏறும் மாவீரனை அனுப்பி வெய்யும் எங்களுக்கு . இப்படிக்கு பகுத்தறிவு தமிழன் .


krishna
ஜூலை 28, 2024 13:12

ENNA KEVALAM.


ராமகிருஷ்ணன்
ஜூலை 28, 2024 11:43

டாஸ்மாக் வருமான வெற்றிக்கு யார் காரணம்னு நினைச்சீங்க. சரக்கு உற்பத்தியாளர்கள் திமுக அமைச்சர்கள். தான். அவர்களே உற்பத்தி, விற்பனை செய்வதால் அபாரமான வருமானம் மட்டுமே. குறைவான போதை வியாபார தந்திரம். அப்ப தான் அதிக சரக்கு வாங்குவீர்கள். ஏற்கனவே மகா மட்டமான டாஸ்மாக் சரக்குக்கு உடல் மரத்து போதை குறைந்த உள்ளது. அதனால் குறைந்த விலையில் அதிக போதை தேடி கள்ளசாராயம் சாப்பிட போராங்க. 10 லட்சம் வாங்குகிறார்கள்


Velan
ஜூலை 28, 2024 11:39

இல்ல வீரன் வீரமா தா இருக்குது வேறு காரணம் (கமிசன்) இருக்கலாம்


தமிழ்வேள்
ஜூலை 28, 2024 10:47

மறத்தமிழனுக்கு ஏற்றது மெத்தனால் மற்றும் கள்ள சாராயம் மட்டுமே.. பிறவற்றை குடித்து ஏமாற வேண்டாம் குடி மக்கழே...ழே..ழே......


Subramaniam Mathivanan
ஜூலை 28, 2024 13:01

மேலும் 10 லட்சமும் கிடைக்கும்


krishna
ஜூலை 28, 2024 13:14

SUPER KARUTHU SIR.


Shekar
ஜூலை 28, 2024 10:28

மதுவுக்கு பெயர் வீரன், ஆஹா...தமிழ் பற்று புல்லரிக்க வைக்கிறது. எங்கும் தமிழ் எதிலும் தமிழ்.


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ