வாசகர்கள் கருத்துகள் ( 1 )
திமுக ஆட்சியில் இருக்கும்வரை இதுபோன்ற அட்டூழியங்கள் தொடரும்.
இளம்பிள்ளை (சேலம் மாவட்டம்):இளம்பிள்ளை பிரதான சாலையின் இருபுறமும் மக்கள் நடமாட்டம் நிறைந்த சாலையில் எதிர் எதிரே உள்ள டாஸ்மாக் கடைகளின் சாலையோரம் அமர்ந்து ஆங்காங்கே குடித்து கும்மாளமிடும் குடிமகன்களால் பொதுமக்கள் பள்ளி குழந்தைகள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர்.சேலம் மாவட்டம், இடங்கணசாலை நகராட்சிக்கு உட்பட்ட இளம்பிள்ளை - சின்னப்பம்பட்டி பிரதான சாலையில் 30 க்கும் மேற்பட்ட குக்கிராம மக்கள் 24 மணிநேரமும் இருசக்கரவாகனங்கள் மற்றும் சைக்கில் கார்களில் செல்வர்.இந்த பிரதான சாலையில் பாப்பாபட்டி, பெட்ரோல் பங்க் அருகே சாலையின் எதிர் எதிரே கடை எண் 7164 மற்றும் 7165 என இரு டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. கடைகள் செயல்படும் பகுதியில் பார்வசதி இல்லை, அதனால் தினமும் 100க்கும் மேற்பட்ட குடிமகன்கள் சாலையின் மிக அருகில் இரு டாஸ்மாக்கடைகளின் முன் கும்பல் கும்பலாக அமர்ந்து கொண்டும், நின்றுகொண்டும் குடிக்கின்றனர். குடித்து முடித்த பின் சாலையில் விபத்தை ஏற்படுத்தும் விதமாக இருசக்கர வாகனங்களில் மின்னல் வேகத்தில் பறக்கின்றனர்.மேலும் அருகில் உள்ள அனைத்து பெட்டி கடைகளிலும் குடிக்க அனுமதிக்கின்றனர். சில ஹோட்டல்கள் மற்றும் பெட்டி கடைகள் பாராக செயல்படுகின்றன. இந்த இரு டாஸ்மாக்கடைகளில் இருந்து சுமார் 500 மீ.,துாரத்தில் இடங்கணசாலை பஸ் ஸ்டாண்ட் உள்ளது. டாஸ்மாக்கடையில் சரக்கு அடிக்கும் குடிமகன்கள் அங்கு பஸ்சிற்கு காத்திருக்கும் பெண் பயணிகள் மற்றும் பள்ளி, கல்லுாரி மாணவிகளிடம் வம்பிழுக்கின்றனர்.மேலும் சிலர் பஸ் ஸ்டாண்டில் வாந்தி எடுத்து மட்டையாகிவிடுகின்றனர். இரு டாஸ்மாக்கடைகள் அருகில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளதால் போதை தலைக்கேறிய குடிமகன்கள் வீடுகளின் கதவை தட்டி அட்டகாசம் செய்கின்றனர். மேலும் பெண்கள் அந்த வழியாக செல்லும் போது ஆபாச வார்த்தையில் திட்டுகின்றனர்.எனவே விபத்தை தடுக்கவும் பெண்கள் மற்றும் மாணவிகள், குடியிருப்புவாசிகள் பயமில்லாமல் பாதுகாப்போடு இருக்க பிரதான சாலையில் எதிர் எதிரே இயங்கும் இந்த இரண்டு டாஸ்மாக்கடைகளை வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெண்கள் எதிர்பார்க்கின்றனர்.
திமுக ஆட்சியில் இருக்கும்வரை இதுபோன்ற அட்டூழியங்கள் தொடரும்.