உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆசிரியர் மிரட்டலால் பரபரப்பு

ஆசிரியர் மிரட்டலால் பரபரப்பு

கடலுார் மாவட்டம், வேப்பூர் அடுத்த கழுதுார் கிராமத்தைச் சேர்ந்தவர் சேரன், 59, வேப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பகுதிநேர ஓவிய ஆசிரியராக பணிபுரிகிறார். இவர் தன் பணியை நிரந்தரமாக்க வேண்டி மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில், நேற்று முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற 'பெற்றோர்களை கொண்டாடுவோம்' மாநாடு நடைபெற்ற திருப்பயர் அருகே உள்ள கண்டப்பங்குறிச்சி கிராமத்தில் உள்ள மொபைல் போன் டவரில் ஏறி, தற்கொலை மிரட்டல் விடுத்து பரபரப்பு ஏற்படுத்தினார். போலீசார் சமாதானம் செய்ததை அடுத்து, கீழே இறங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை